புதுடில்லி, செப். 26- மின்சார வாகனங்களை (இவி) அதிக அளவில் தயாரிப்பதில் தமிழ்நாடு முன்னணி மாநிலங்க ளுள் ஒன்றாக உள்ளது.
நாட்டில் விற்பனை செய் யப்படும் மொத்த மின்சார வாகனங்களில் 40 சதவீதம் தமிழ்நாட்டி லிருந்து தயாரிக்கப்பட் டவை என்று ஒன்றிய சாலைப் போக்குவரத்து துறை அமைச்சக வாகன் புள்ளிவிவரங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரண்டு சக்கர வாகனங்கள் மற்றும் கார் உள்ளிட்ட நான்கு சக்கர மின்சார வாகனங்களை தயாரிக்கும் 10 பெரிய நிறுவனங்கள் தமிழ்நாட் டில் உள்ளன.
வாகன் வலைதள புள்ளி விவரத்தில், நடப்பாண்டு ஜனவ ரியில் இருந்து செப்டம் பர் 20 வரையில் நாடு முழுவதும் உள்ள வட் டார போக்குவரத்து அலுவலகங்களில் (ஆர்டிஓ) பதிவு செய்யப் பட்ட மின்சார வாகன எண்ணிக்கை 10,44,600-ஆக உள்ளது.
இதில் தமிழ்நாட்டில் உள்ள ஆர்டிஓ அலுவல கங்களில் இருந்து மட்டும் பதிவான மின் வாகனங் களின் எண்ணிக்கை 4,14,802-ஆக உள்ளது என்று தெரிவிக்கப்பட் டுள்ளது.
2025-க்குள் மின் வாகன தயாரிப் புக்காக ரூ.50,000 கோடி தமிழ்நாட்டில் முதலீடு செய்யப்படும் என எதிர்பார்க்கப்படு கிறது.
2030-க்குள் இந்தியா வில் விற்பனையாகும் அனைத்து வகையான மின்சார வாகனங்களி லும் 30 சதவீத பங்களிப் பினை வழங்க தமிழ்நாடு இலக்கு நிர்ணயித்துள் ளது.
No comments:
Post a Comment