பகுத்தறிவாளர் கழகம் சார்பில் சந்திரயான்-3 விஞ்ஞானி ப.வீரமுத்து வேலுவின் தந்தைக்குப் பாராட்டு விழா - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, September 3, 2023

பகுத்தறிவாளர் கழகம் சார்பில் சந்திரயான்-3 விஞ்ஞானி ப.வீரமுத்து வேலுவின் தந்தைக்குப் பாராட்டு விழா

விழுப்புரம், செப். 3 - கழகத் தலைவர் ஆசிரியர் அவர்களின் அறிவுறுத்தலின்படி, அறிவியல் வளர்க்க ஆயுளைக் கொடுத்த மராத்திய மாநிலத்தின் மூடநம்பிக்கை ஒழிப்புப் போராளி டாக்டர் நரேந்திர தபோல்கர் மறைந்த நாளை தேசிய அறிவியல் நாளாக கடைப்பிடித்து தமிழ்நாடெங் கும் கூட்டங்கள் நடத்தப்பட வேண்டும் என்ற அறிவிப்பிற் கிணங்க -

விழுப்புரம் மாவட்ட பகுத் தறிவாளர் கழகம் சார்பாக மூட நம்பிக்கை ஒழிப்புப் போராளி டாக்டர் நரேந்திர தபோல்கர் அவர்களின் 10ஆவது ஆண்டு நினைவு நாள் கருத்தரங்கம் மற் றும் நாட்டிலேயே முதலாவதாக விழுப்புரம் மாவட்ட இளைஞ ரணித் தலைவர் அ.சதீஷ் ஏற்பாட்டில் சந்திரயான்-3 விண் கலத்தின் திட்ட இயக்குநர் விஞ்ஞானி ப.வீரமுத்துவேல் தந்தை தோழர் ப.பழனிவேலுக்கு பாராட்டு விழா 27.08.2023 

ஞாயிறு மாலை 4 மணியளவில் விழுப்புரம் ஏ.எஸ்.ஜி திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

விழுப்புரம் மாவட்ட பகுத் தறிவாளர் கழகத் தலைவர் துரை.திருநாவுக்கரசு தலைமை தாங்கினார். மாவட்ட பகுத்தறி வாளர் கழக செயலாளர் ரா.செ.தொல்காப்பியன் வரவேற்றார். தலைமை கழக அமைப்பாளர் தா.இளம்பரிதி, மாநில இளைஞ ரணி துணைச்செயலாளர் தா. தம்பிபிரபாகரன், மாவட்ட கழக தலைவர், ப.சுப்பராயன், மாவட்ட கழக அமைப்பாளர் சே.வ.கோபண்ணா, மாவட்ட ப.க..துணைத் தலைவர் கி.கார்வண்ணன், விழுப்புரம் நகர கழக தலைவர் கொ.பூங்கான், விழுப்புரம் நகர கழக செயலாளர் ச.பழனிவேல் ஆகியோர் முன் னிலை வகித்தனர்.

மாநில ஆதிராவிட நலக்குழு து.செயலாளர், திமுக சட்ட மன்ற மேனாள் உறுப்பினர் செ.புஷ்பராஜ், மாவட்ட திமுக துணை செயலாளர் த.யா. இளந் திரையன், விழுப்புரம் நகர திமுக செயலாளர் இரா. சக்கரை, சி.பி.அய் மாவட்ட செயலாளர் ஆ. சவுரிராஜன், சி.பி.எம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் வி. இராதாகிருஷ்ணன், மதிமுக தலைமை செயற்குழு உறுப்பினர் நரசிம்மன், டி.ஒய்.எப்.அய் மாவட்ட செயலாளர் செ. அறி வழகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

திராவிடர் கழக செயலவைத் தலைவர் சு.அறிவுக்கரசு மற்றும் பகுத்தறிவாளர் கழக மாநில துணை தலைவர் ஆடிட்டர் கு.இரஞ்சித் குமார் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

இந்நிகழ்வில் திராவிடர் கழக காப்பாளர் வேட்டவலம் பி. பட்டாபிராமன், விழுப்புரம் மாவட்ட கழக துணை செயலா ளர் ஏ.இரமேஷ், விழுப்புரம் மாவட்ட கழக துணை தலைவர் க. திருநாவுக்கரசு, திண்டிவனம் மாவட்டத்தலைவர் இர. அன் பழகன், விழுப்புரம் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ஜெ.வசந்த் குமார், திண்டிவனம் நகர இளைஞரணி அமைப்பா ளர் ஓவியர் செந்தில், மாநில சட்டக் கல்லூரி திராவிட மாண வர் கழக மாணவர் அமைப்பாளர் மு.இளமாறன், அண்ணா கிராம ஒன்றிய கழக தலைவர் இரா ஜேந்திரன், மக்கள் அதிகாரம் தோழர்கள் திருநாவுக்கரசு, இள வேந்தன், முரளி, திமுக தலை மைக் கழக பேச்சாளர் துரை. மணிவேலன், விழுப்புரம் நகர திமுக துணை செயலாளர் வி. புருஷோத்தமன், எஸ்.ஆர்.எம்.யூ தோழர்கள் ராமச்சந்திரன், அமரேசன், பெரியார் படிப்பகம் க. கவுதமன், நந்தகுமார், விழுப் புரம் நகர திமுக சுற்றுசூழல் அமைப்பாளர் ஆர்.வி.எம்.பூபா லன், திமுக வலைதள விழுப்புரம் தொகுதி அமைப்பாளர் டி.ஆர். எஸ். குருராமலிங்கம், விழுப்புரம் நகர திமுக சேர்ந்த பி.எஸ். சீனுவாசன், செ.ராஜபாண்டியன், க. கதிர், பெரியார் பிஞ்சு ச.அத் தீட்ஸ் மற்றும் புதிய சிறகுகள் பயிற்சிப் பள்ளி மற்றும் நிலா அறக்கட்டளை மாணவர்களு டன் திரளானோர் கலந்து கொண்டனர். இறுதியாக விழுப் புரம் மாவட்ட இளைஞரணித் தலைவர் அ.சதீஷ் நன்றி கூறினார்.

No comments:

Post a Comment