பூந்தமல்லி,செப்.10 - திருவள்ளூர் மாவட்டம், பூந்தமல்லி வட்டம், நும்பல் புளியம்பேடு கிராமத்தில் அரசுக்கு சொந்தமான 0.66 எக்டேர் நிலம் தனியாரால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்தது.
இது குறித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் ஆக்கிரமிப்புகளை அகற்றி அரசு நிலத்தை மீட்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இதனைத் தொடர்ந்து திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் உத்தரவின் பேரில், திருவள்ளூர் கோட் டாட்சியர் மை.ஜெயராஜ் பவுலின் மேற்பார்வையில், பூந்தமல்லி வட்டாட்சியர் மாலினி தலைமையில் , மண்டல துணை வட்டாட்சியர் இராஜ.யுகந்தர், கிராம நிர்வாக அலுவலர் தியாகராஜன் மற்றும் நகராட்சி, வருவாய் துறை பணியாளர்கள் ஜேசிபி எந்திரம் மூலம் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு அந்த நிலம் மீட்கப்பட்டது.
இதையடுத்து அந்த இடத்தில் பொது அறிவிப்பு தாக்கீது ஒட்டப்பட்டு மற்றும் பொது அறிவிப்பு பலகை வைக்கப்பட்டது. மீட்கப்பட்ட அரசு நிலத் தின் மதிப்பு ரூ.30 கோடி என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment