தமிழ்நாட்டுக்குக் காவிரியில் 3000 கன அடி நீர் திறக்க வேண்டும் கருநாடகாவுக்கு ஒழுங்காற்றுக் குழு பரிந்துரை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, September 28, 2023

தமிழ்நாட்டுக்குக் காவிரியில் 3000 கன அடி நீர் திறக்க வேண்டும் கருநாடகாவுக்கு ஒழுங்காற்றுக் குழு பரிந்துரை

புதுடில்லி, செப்.28 -  தமிழ்நாட் டிற்கு காவிரியில் அடுத்த 15 நாட்களுக்கு விநாடிக்கு 3,000 கன அடி நீர் திறக்குமாறு கரு நாடக அரசுக்கு காவிரி ஒழுங்காற்று குழு பரிந்துரை செய் துள்ளது.

டில்லியில் கடந்த 12-ஆம் தேதி நடந்த காவிரி ஒழுங்காற்று குழு கூட்டத்தில், அடுத்த 15 நாட்களுக்கு தமிழ்நாட்டிற்கு விநாடிக்கு 5,000 கனஅடி நீர் திறக்குமாறு பரிந்துரை செய்யப் பட்டது. காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் இதுவே உத்தரவாக பிறப்பிக்கப்ப‌ட்டது. இதற்கு தடை விதிக்கக்கோரி கருநாடக அரசு தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் ஏற்க மறுத்தது. இதை கண்டித்து பெங்களூருவில் 26.9.2023 அன்று முழு அடைப்புப் போராட்டம் நடைபெற்றது. 

இந்நிலையில், காவிரி ஒழுங்காற்று குழுவின் 87ஆ-வது கூட்டம் அதன் தலைவர் வினித் குப்தா தலைமையில் டில்லியில்  26.9.2023 அன்று நடந்தது. இதில் குழுவின் செயலர் டி.டி. சர்மா, உறுப்பினர் கோபால் ராய், தமிழ்நாட்டு அரசு சார்பில் காவிரி தொழில்நுட்ப குழு தலைவர் சுப்பிரமணியம் ஆகி யோர் பங்கேற்றனர். கருநாடகா, கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களின் நீர்வளத் துறை அதிகாரிகள் காணொலி மூலம் பங்கேற்ற‌னர். இதில் தமிழ்நாட்டு, கரு நாடக அரசுகள் தரப்பில் கூறப் பட்டதாவது: 

தமிழ்நாட்டு அரசு அதிகாரிகள்: காவிரி மேலாண்மை ஆணைய உத்தர வின்படி, தமிழ்நாட்டிற்கு விநா டிக்கு 5,000 கனஅடி நீரை கரு நாடகா முறையாக திறக்க வில்லை. இதனால், தமிழ்நாட் டில் நெற்பயிர்கள் கருகியுள்ளன. விவசாயிகள் பாதிக்க‌ப்பட்டுள்ள னர். எனவே, நிலுவையில் உள்ள 50 டிஎம்சி நீரை திறக்க கரு நாடகாவுக்கு உத்தரவிட வேண் டும். அக்டோபரில் திறக்க வேண்டிய 20.22 டிஎம்சி நீரை முறையாக வழங்க‌ வேண்டும். காவிரியில் அடுத்த 15 நாட் களுக்கு விநாடிக்கு 12,500 கன அடி நீர் திறக்குமாறு கருநாட காவுக்கு உத்தரவிட வேண்டும். 

கருநாடக அரசு அதிகாரிகள்: கருநாடகாவில் கடும் வறட்சி நிலவுகிற‌து. காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் மட்டும் 32 வட்டங்கள் வறட்சியின் பிடியில் உள்ளன. இருப்பினும் காவிரி மேலாண்மை ஆணைய உத்தரவுப்படி தமிழ் நாட்டிற்கு காவிரி நீர் திறக்கப் பட்டுள்ளது. கிருஷ்ணராஜ சாகர், கபினி, ஹாரங்கி, ஹேமா வதி ஆகிய அணைகளுக்கு நீர் வரத்து 53 சதவீதம் குறைந்துள் ளது. இனிமேல் ஆணையத்தின் உத்தரவை பின்பற்ற முடியாத சூழ்நிலையில் கருநாடகா இருக் கிறது.

இவ்வாறு இரு தரப்பிலும் தெரிவிக்கப்பட்டது. 

இதைத் தொடர்ந்து காவிரி ஒழுங்காற்று குழு தலைவர் வினித் குப்தா,

‘‘தமிழ்நாட்டின் குறுவை சாகு படிக்காக கருநாடக அரசு காவிரியில் அடுத்த 15 நாட்களுக்கு விநாடிக்கு 3,000 கனஅடி நீர் திறக்க வேண்டும். அதாவது, செப்.28-ஆம் தேதி முதல் அக்.15ஆ-ம் தேதி வரை பிலிகுண்டுலு சோதனை நிலையத் தில் விநாடிக்கு 3,000 கனஅடி நீர் தமிழ்நாட்டிற்கு செல்வதை உறுதி செய்ய வேண்டும்’’ என்று பரிந்துரை செய்தார். 


No comments:

Post a Comment