செந்துறை, செப். 19 - மறைந்த மேனாள் முதலமைச்சர் முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, அரியலூர் மாவட்டம், செந்துறை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி யில், மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டல் மய்யம் சார்பில் 16.9.2023 நடை பெற்ற தனியார் வேலை வாய்ப்பு முகாமில் 297 பேருக்கு பணி உறுதிக் கடிதங்கள் வழங்கப் பட்டன.
முகாமை அமைச்சர் சா.சி.சிவசங்கர் தொடங்கி வைத்துப் பேசுகையில், இந்த வேலைவாய்ப்பு முகாமுக்கு 102 நிறுவனங் கள் வந்திருக்கின்றன.
முகாமுக்கு வந்த 2,063 பேர் வேலைவாய்ப்புக்கு பதிந்துள்ளனர். அவர் கள் அனைவருக்கும் வேலை வழங்க முடியாது. முகாமில் கலந்து கொண் டவர்களில் 297 பேருக்கு வேலைக்கான உறுதிக் கடிதம் வழங்கப்படுகிறது.
மேலும் 512 பேர் இரண்டாம் கட்ட நேர் முக தேர்வுக்குத் தேர்வா கியுள்ளனர்.
வரும் ஜனவரி மாதத்தில் மாபெரும் தொழில் முதலீட்டு மாநாட்டுக்கான பணி களை முதலமைச்சர் மேற்கொள்கிறார்.
குன்னம் தொகுதியில் உள்ள சிப்காட்டில் தைவான் நாட்டைச் சேர்ந்த காலணி தயாரிக் கும் தொழிற்சாலை வர வுள்ளது.
இதன்மூலம் 5,000 முதல் 10,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்க உள்ளது என்றார் அவர். முகாமுக்கு ஆட்சியர் ஜா. ஆனிமேரி சுவர்ணா தலைமை வகித்தார்.
அரியலூர் சட்ட மன்ற உறுப்பினர் கு.சின்னப்பா முன்னிலை வகித் தார்.
No comments:
Post a Comment