டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
👉 எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணி நல்ல வண்ணம் வளர்ந்து வருகிறது என்கிறது தலையங்க செய்தி.
👉 மேனாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் ஒரே நாடு-ஒரே தேர்தல் நடத்துவதை ஆராய குழு அமைப்பு. ஒன்றிய அரசின் திடீர் உத்தரவால் பரபரப்பு.
👉 வரும் மக்களவை தேர்தலில் ஒன்றிணைந்து போட்டியிட முடிவு. தொகுதிப் பங்கீடு பேச்சு உடனடியாக தொடங்கும் என ‘இந்தியா’ கூட்டணி தீர்மானம்.
டெக்கான் கிரானிக்கல், சென்னை:
👉 பொய்களையும், அவதூறுகளையும், வெறுப்பையும் கொண்ட பாஜ ஆட்சிக்கு கவுண்ட்டவுன் ஆரம்பம்: மும்பையில் நடைபெற்ற ‘இந்தியா’ கூட்டணி கூட்டத்தின் செய்தியாளர் சந்திப்பில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
இந்தியன் எக்ஸ்பிரஸ்:
👉 ‘இந்தியா சர்வாதிகார நாடாக மாறுகிறது. மணிப்பூர் பற்றி எரியும் போது நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தொடர் இல்லை. செப்டம்பர் 18 முதல் செப்டம்பர் 22 வரை நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தொடர் கூட்டப்படும் என்று ஒன்றிய அரசு 31.8.2023 அன்று வெளியிட்ட திடீர் அறிவிப்பு குறித்து ஒன்றிய பிரதமர் மோடி மீது மல்லிகார்ஜூன கார்கே தாக்கு.
தி டெலிகிராப்:
👉 இந்தியா ஒரு ஹிந்து ராஷ்டிரா. அனைத்து இந்தியர் களும் ஹிந்துக்கள் என்கிறார் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத்.
- குடந்தை கருணா
No comments:
Post a Comment