2500 ஆண்டுகள் பழைமை வாய்ந்த பவள மணிகள்: கீழடி ஆய்வில் கண்டுபிடிப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, September 25, 2023

2500 ஆண்டுகள் பழைமை வாய்ந்த பவள மணிகள்: கீழடி ஆய்வில் கண்டுபிடிப்பு

சிவகங்கை, செப். 25-  கீழடி அகழாய்வில் 2 சூதுபவள மணிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது 2500 ஆண்டுகளுக்கு முந்தைய காலத்தில் பயன்படுத்தப்பட்டது என அதிகாரிகள் தெரிவித்தனர்.

சிவகங்கை மாவட்டம் திருப்பு வனம் அருகே கீழடியில் அகழாய் வுப் பணி கடந்த 2015ஆ-ம் ஆண்டு முதல் தொடங்கி நடந்து வருகிறது. கீழடி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் மட்டும் இதுவரை 8 கட்ட அகழாய்வுப் பணிகள் நடந்து முடிந்து இருக்கின்றன. 

இதில் ஒன்றிய தொல்லியல் துறை தரப்பில் 3 முறையும், தமிழ் நாடு தொல்லியல் துறை சார்பில் 5 முறையும் அகழாய்வுப் பணிகள் நடத்தி முடிக்கப்பட்டு இருப்பதாக தகவல் தெரிவிக்கின்றன.

இந்த 8 கட்ட அகழாய்வில் கண்டெடுக்கப் பட்ட ஏராளமான தொல் பொருட்களை மக்கள் பார்க்கும் வகையில் கொந்தகையில் கீழடி அகழ் வைப்பகம் ரூ.18 கோடியே 46 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டு, அதனை முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த மார்ச் மாதம் தொடங்கி வைத்தது குறிப் பிடத்தக்கது.

இதன் தொடர்ச்சியாக கீழடி யில் 9-ஆம் கட்ட அகழாய்வுப் பணிகள் கடந்த ஏப்ரல் மாதம் தொடங்கியது.

அதனையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார். 

அதன்படி, கீழடி, அகரம், கொந்தகை ஆகிய 3 இடங்களில் இந்த அகழாய்வுப் பணிகள் நடந்து வருகின்றன.

இதில் தொல்லியல் துறை இணை இயக்குநரும், கீழடி இயக் குநருமான ஆர்.சிவானந்தம், தொல்லியல் அலுவலர் காவியா ஆகியோர் தலைமையில் கொந்த கையில் நடைபெற்று வரும் 4ஆவது கட்ட அகழாய்வில், 'இசட்.கியூ.3' என்ற அகழாய்வு குழி யில் 46 செ.மீ. ஆழத்தில் முதுமக்கள் தாழி ஒன்று அகழ்ந்தெடுக்கப் பட்டது.

இது கருப்பு, சிவப்பு நிற வகையை சார்ந்தது. அந்த தாழி யின் உள்ளே 2 சூதுபவள மணிகள் கண்டெடுக்கப்பட்டு இருக்கின் றன. அந்த 2 மணிகளும் பீப்பாய் வடிவில் சராசரியாக 1.3 செ.மீ. நீளத்திலும், 2.3 செ.மீ. விட்டத்தி லும் இருக்கிறது.

அதில் ஒரு மணியில் அலை முறை மற்றும் வட்டக் கோடுக ளுடன் வெள்ளை வண்ணம் தீட்டப்பட்டு உள்ளது. 

வழக்கமாக அகழாய்வில் கண் டெடுக்கப்படும் கண்ணாடி மணி கள், பாசி மணிகள், கல் மணிகள் வரிசையில் சூதுபவள மணிகளும் கிடைத்து வருகின்றன. 

ஏற்கெனவே கொந்தகையில் 3-ஆம் கட்ட அகழாய்வில் அகழ்ந் தெடுக்கப்பட்ட முதுமக்கள் தாழி யில் இதேபோல் 74 சூதுபவளம் மணிகள் கண்டெடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. சங்க காலத்தில் சூதுபவளம் மணிகள் அழகுப் பொருட்கள் மற்றும் அணிகலன் களில் அதிக அளவில் பயன்படுத்தப் பட்டதாகவும், குறிப்பாக பொரு ளாதாரத்தில் மேம்பட்டவர்கள் தான் இதை பெரும்பாலும் பயன் படுத்தி இருக்க வாய்ப்பு இருப்பதா கவும் கூறப்படுகிறது.

தற்போது கண்டெடுக்கப்பட்ட சூதுபவளம் மணிகள் ஏறத்தாழ 2 ஆயிரத்து 500 ஆண்டுகளுக்கு முந் தைய காலத்தில் பயன்படுத்தப்பட்டு இருக்கலாம் என தொல்லியல் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment