ஜி 20 மாநாடு: தமிழ்நாடு முதலமைச்சர் டில்லி பயணம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, September 9, 2023

ஜி 20 மாநாடு: தமிழ்நாடு முதலமைச்சர் டில்லி பயணம்


சென்னை, செப்.9 
 ஜி20  உச்சி   மாநாட்டை யொட்டி, குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு அளிக்கும் விருந்தில் பங்கேற்பதற்காக முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (9.9.2023) டில்லி புறப் பட்டுச் செல்கிறார். 

ஜி20 அமைப்புக்கு இந்தியா தலைமைப் பொறுப்பு ஏற்றுள்ள நிலையில், அந்த அமைப்பின் 18-ஆவது உச்சி மாநாடு டில்லியில் இன்று தொடங்குகிறது. டில்லி பிரகதி மைதானத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள பாரத் மண்டபத்தில் இந்த மாநாடு 2 நாள் நடைபெறுகிறது. அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் தலைவர்கள் இதில் பங்கேற்கின்றனர். 

இதையொட்டி, சிறப்பான ஏற்பாடுகள் செய்யப் பட்டுள்ளன. இந்நிலையில், ஜி20 மாநாட்டை யொட்டி, உலக நாடுகளின் தலைவர்களுக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு இன்று சிறப்பு விருந்து அளிக்கிறார். இந்த விருந்தில் பங்கேற்கு மாறு மேனாள் பிரதமர்கள், மாநில முதலமைச்சர்கள், அரசியல் கட்சி தலைவர்கள், வெளிநாட்டு தூதர்கள், தொழிலதிபர்கள் உள் ளிட்டோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த விருந்தில் பங்கேற்பதற்காக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை டில்லி புறப்பட்டுச் செல்கிறார். 

திமுக பொருளாளரும் நாடாளுமன்ற குழுத் தலைவருமான டி.ஆர்.பாலுவும் உடன் செல்கிறார். டில்லியில் முதலமைச்சரை தமிழ்நாடு அரசின் சிறப்பு பிரதிநிதி ஏகேஎஸ் விஜயன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வரவேற்கின்றனர். 

குடியரசுத் தலைவர் இன்று இரவு அளிக்கும் விருந்தில் பங்கேற்கும் முதலமைச்சர் ஸ்டாலின், நாளை காலை டில்லியில் இருந்து புறப்பட்டு சென்னை திரும்புகிறார்.


No comments:

Post a Comment