சுகாதார நிலையங்களில் மாரடைப்பு மருந்துகள் 2,000 பேர் பயன் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, September 9, 2023

சுகாதார நிலையங்களில் மாரடைப்பு மருந்துகள் 2,000 பேர் பயன்

சென்னை,செப்.9- மாரடைப்புக்கான உயிர் காக்கும் மருந்துகளை ஆரம்ப சுகாதார நிலை யங்களில் விநியோகிக்கும் திட்டத்தை நடைமுறைப் படுத்திய இரு மாதங் களுக்குள் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரின் உயிர்கள் காக்கப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

சென்னையில் வேளச்சேரி எம்.ஆர்.டி.எஸ். மேம் பாலத்தின் கீழ் ரூ.1.44 கோடி மதிப்பில் புதிதாக அமைக்கப் பட்ட நடைபாதையுடன் கூடிய பூங்காவினை அமைச்சர் மா.சுப்பிரமணியன் 8.9.2023 அன்று திறந்து வைத்தார்.

இந்நிகழ்ச்சியில், நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன், துணை மேயர் மகேஷ்குமார், தெற்கு வட்டார துணை ஆணையர் அமித், மண்டலக் குழுத் தலைவர் துரைராஜ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

அப்போது அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியா ளர்களிடம் கூறியதாவது: தமிழ்நாட்டில் போதைப் பொருள்களை ஒழிக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின்பேரில், பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதேபோன்று அண்டை மாநிலங்களில் இருந்து கஞ்சா கடத்தப் படுவதையும் தடுத்துள்ளோம். கரோனா பாதிப்புக்குப் பிறகு இளம் வயதினருக்கு மாரடைப்பு ஏற்படுவது அதிகரித்துள்ளது. இதையடுத்து மாரடைப்பு வந்தால் தற்காத்துக் கொள்வதற்கான உயிர் காக்கும் 14 வகையான மருந்துகளை தமிழ்நாட்டில் உள்ள அனைத்து சுகாதார நிலையங்களிலும் இருப்பு வைக்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

இதன் மூலம் உரிய சிகிச்சைகள் தொடக்க நிலையிலேயே கிடைப்பதை உறுதி செய்ய முடியும். இந்தத் திட்டம் கடந்த ஜூன் மாதம் நடைமுறைப்படுத்தப்பட்டது. இரு மாதங்களில் மட்டும் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரின் உயிர்கள் இந்த மருந்துகளின் மூலம் காப்பாற்றப்பட்டுள்ளன என்றார் அவர்.


No comments:

Post a Comment