தமிழ்நாடு முழுவதும் சூரியசக்தி பூங்கா திட்டத்தை தனியார் பங்களிப்புடன் அனைத்து மாவட்டங்களிலும் செயல்படுத்தி அதன் மூலம் 2,000 மெகாவாட் திறனில் மின் உற்பத்தி செய்ய தமிழ்நாடு மின்வாரியம் முடிவு செய்துள்ளது. இதற்கான அறிவிப்பைக் கடந்த 2021ஆம் ஆண்டு வெளியிட்டது.
மின் உற்பத்தி செய்ய ஒரு மெகாவாட்டுக்கு 5 ஏக்கர் நிலம் தேவைப்படும் என்பதால், துணைமின் நிலையங்களுக்கு அருகில் நிலம் வழங்குமாறு அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் மின்வாரியம் தரப்பில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
அதன்படி, முதல்கட்டமாக செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவாரூர், கரூர், சேலம், நாகை உள்ளிட்ட பல மாவட்டங்களில் நிலங்கள் கண்டறியப்பட்டுள்ளன. அந்த மாவட்டங்களில் தலா 50 முதல்100 மெகாவாட் என 2,000 மெகாவாட் திறனில் மின் நிலையங்கள் அமைக்கத் திட்டமிட்டுள்ளது. இதில், முதல் பூங்காவை திருவாரூரில் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment