புதுடில்லி, செப்.5 ஜி-20 நாடுகளின் பிரதிநிதிகள் உச்சி மாநாட்டில் பங்கேற்க இருக்கும் நிலையில் வெளிநாட்டு நண்பர்களின் கண்ணில் ஏழை எளிய மக்களின் வறுமை நிலை பட்டுவிடக் கூடாது என வறியவர்களை அடித்து துரத்தி வருகிறது ஒன்றிய அரசு
ஜி-20 நாடுகளின் 18 ஆவது உச்சி மாநாடு இந்தாண்டு இந்தியாவின் தலை மையில் புதுடில்லியில் செப்டம்பர் 9-10 ஆகிய தேதிகளில் நடைபெற இருக்கிறது. இதற்காக டில்லி முழுவதும் ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. உச்சிமாநாட்டிற்கு முன்னதாக நாடு முழு வதும் 200-க்கும் மேற்பட்ட கூட்டங்களை ஒன்றிய அரசு நடத்தியது.
இந்த நூற்றாண்டில் பன்னாட்டு அரசியல் தொடர் மாற்றங்களை சந்தித்து வருகிறது. இதை எதிர்கொள்ள அனைத்து நாடுகளின் குரலும் கேட்கப்பட வேண் டியது அவசியம். அய்.நா.விலும் சீர்திருத் தங்களை மேற்கொள்ள வேண்டும். தெற்குலக நாடுகளின் நம்பிக்கையை நிறை வேற்றும் பணியை இந்தியா மேற்கொள் ளும் ஜி-20 கூட்டமைப்பில் ஆப்ரிக்கா ஒன்றியம் நிரந்தர உறுப்பின ராக இணைய இந்தியா ஆதரவளிக்கிறது'' எனவும் பிரதமர் மோடி கூறியுள்ளார்.
“அழகு படுத்தும் திட்டம்” என்பதன் மூலம்...
20 நாடுகளின் பிரதிநிதிகள் உச்சி மாநாட்டில் பங்கேற்க இருக்கும் நிலை யில் வெளிநாட்டு நண்பர்களின் கண்ணில் ஏழை எளிய மக்களின் வறுமை நிலை பட்டுவிடக் கூடாது என வறியவர்களை அடித்துத் துரத்தி வருகிறது ஒன்றிய அரசு. பல கோடிகள் ஒதுக்கப்பட்டு “அழகு படுத்தும் திட்டம்” என்பதன் மூலம் இந்த செப்படி வித்தைகளை செய்து கொண்டிருக்கிறது மோடி அரசு.
2023 ஜனவரி முதல் நூற்றுக்கணக்கான வீடுகள் மற்றும் சாலையோர கடைகள் இடிக்கப்பட்டு ஆயிரக்கணக்கான மக்கள் துரத்தப்பட்டுள்ளனர். பல குடியிருப்பாளர் களுக்கு அவர்களின் வீடுகளை இடிப் பதற்கு சில மணி நேரத்திற்கு முன்பு தான், அவர்கள் வெளியேறவேண்டும் என்கிற அறிவிப்புகள் கொடுக்கப்பட்டன. ஆனால், அவர்களின் வீடுகள் இடிக்கப் பட்ட பிறகு அந்த மக்களுக்கு மாற்று ஏற்பாடுகள் எதையும் பாஜக அரசு செய்து தரவில்லை. இதனால் ஆயிரக் கணக்கான மக்கள் வீடுகளை இழந்து, அதீத வறுமைக்குள் தள்ளப்பட்டு தெரு விலும் வாழவிடாமல் அவர்கள் துரத்தப் பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 2 கோடிக்கும் அதிகமான மக்கள் வசிக்கும் தலைநகர் டில்லியில் 2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின்போது 47,000 பேர் வீடற்றவர்களாக இருந்தனர் என கூறப் பட்டது. அப்போதே இது உண்மையான மதிப்பீடு அல்ல என்றும் உண்மையான எண்ணிக்கை குறைந்தது 150,000 என்றும் சமூக ஆர்வலர்கள் கூறினர்.
ஒருபுறம் பன்னாட்டு அரசியலில் ஒடுக்கப்படும் நாடுகளின் குரல் கேட்கப் படவேண்டும் என்று கூறிக்கொண்டே மறுபுறம் சொந்த நாட்டு மக்களின் அவலக்குரலைக் கேளாமல் அலட்சியப் படுத்தி விட்டு சர்வ சாதாரணமாக கடந்து செல்கிறது மோடியின் பாஜக அரசு.
No comments:
Post a Comment