ரயில்களில் குழந்தைகளுக்கு முழுக் கட்டணம் ஏழு ஆண்டுகளில், கூடுதலாக ரூ.2 ஆயிரத்து 800 கோடி வருவாயாம் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் தகவல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, September 22, 2023

ரயில்களில் குழந்தைகளுக்கு முழுக் கட்டணம் ஏழு ஆண்டுகளில், கூடுதலாக ரூ.2 ஆயிரத்து 800 கோடி வருவாயாம் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் தகவல்

புதுடில்லி, செப் 22- ரயில்களில், 5 முதல் 12 வயதுவரை உள்ள குழந்தைகளுக்கு தனி படுக்கையோ, தனி இருக்கையோ பாதிக் கட் டணத்தில் அளிக்கப்பட்டு வந்தது.

கடந்த 2016ஆ-ம் ஆண்டு மார்ச் 31-ஆம் தேதி, இந்த விதிமுறையில் மாற்றம் கொண்டுவரப் பட்டது. அதன்படி, குழந் தைகளுக்கு தனி படுக் கையோ, தனி இருக் கையோ பெறப்பட்டால், அதற்கு முழு கட்டணம் செலுத்த வேண்டும். தனி படுக்கை, தனி இருக்கை இல்லாமல், பெரியவர்க ளுடன் ஒரே படுக்கையை குழந்தைகள் பகிர்ந்து கொண்டால் மட்டுமே அவர்களுக்கு பாதி கட் டணம் வசூலிக்கப்படும் என்று அறிவிக்கப்பட் டது.

இந்த புதிய விதிமுறை, 2016-ஆம் ஆண்டு ஏப்ரல் 21ஆம் தேதி முதல் அம லுக்கு வந்தது. இந்நிலை யில், இதனால் கிடைத்த வருவாய் குறித்து தகவல் அறியும் உரிமை சட்டத் தின்கீழ், சந்திரசேகர் கவுர் என்பவர் கேட்ட கேள்விக்கு ரயில்வே அமைச்சகத்தின் கீழ் உள்ள ரயில்வே தகவல் சேவை மய்யம் பதில் அளித்துள்ளது. அதில் கூறப்பட்டு இருப்பதா வது:-

ரயில்களில் குழந்தை கள் பயணக் கட்டண விதிமுறையில் செய்யப் பட்ட மாற்றத்தால், கடந்த 7 ஆண்டுகளில், ரூ.2 ஆயிரத்து 800 கோடி கூடுதல் வருவாய் கிடைத் துள்ளது. அதிகபட்சமாக, 2022-2023 நிதிஆண்டில், ரூ.560 கோடி கூடுதல் வருவாயும், குறைந்தபட் சமாக 2020--2021 நிதி ஆண்டில் ரூ.157 கோடி கூடுதல் வருவாயும் கிடைத் தது. 7 ஆண்டுகளில், தனி படுக்கை பெற்று முழு கட்டணத்தில் 10 கோடிக்கு மேற்பட்ட குழந்தைகள் பயணித்து உள்ளனர். தனி படுக்கை பெறாமல், பாதி கட்ட ணத்தில் 3 கோடியே 60 லட்சம் குழந்தைகள் பய ணித்துள்ளனர் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment