இஸ்ரோவின் சந்திரயான்-3 விண் கலம் நிலவின் தென் துருவத்தில் வெற்றிகரமாக தரையிறங்கி, 14 நாள் ஆயுட்காலம் என்ற அளவில் பல ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், இஸ்ரோ விஞ்ஞானிகள் அடுத்த திட்டமான சூரியனை ஆய்வு செய்யும் ஆதித்யா எல்-1 விண்கலத்தை உருவாக்கி, விண்ணில் செலுத்த முடிவு செய்தனர். விண்கலத்தை செலுத்துவதற் கான 24 மணிநேர கவுன்ட் டவுன் 2.9.2023 அன்று தொடங்கப்பட்டது. அதன்படி, ஆதித்யா எல்-1 என்ற விண்கலத்தை சிறீஅரி கோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஏவு மய்யத்தில் இருந்து றிஷிலிக்ஷி-சி57 ராக்கெட் மூலம் நேற்று (2.9.2023) காலை 11:50 மணிக்கு விண்ணில் செலுத் தினார்கள்.
இந்த நிகழ்வை காண பொதுமக்கள், பள்ளி மாணவர்கள், அறிவியல் ஆய் வாளர்கள் என பலரும் காத்துக் கொண்டிருக்கின்றனர். இதற்கிடையில், ராக்கெட்டுக்கான எரிபொருள் நிரப்பும் பணியானது நடைபெற்றது. அதன்படி, பிஎஸ்எல்வி ராக்கெட்டில் உள்ள நான்கு அடுக்குகளிலும் எரி பொருள் நிரப்பும் பணியானது முழு வதுமாக முடிக்கப்பட்டு, சூரியனை நோக்கி செலுத்துவதற்கு அனைத்து ஏற்பாடுகளும் முடிவடைந்தது. பிஎஸ் எல்வி ராக்கெட் ஆனது செலுத்தப் பட்டவுடன் புவியின் தாழ்வு வட்டப் பாதையை சென்றடைவதற்கு 72 நிமி டங்கள் (1 மணி நேரம் 12 நிமிடங்கள்) ஆகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் பிறகு ராக்கெட்டில் இருக்கக் கூடிய அடுக்குகள் கழற்றிவிடப்பட்டு மேற்பகுதியில் இருக்கக்கூடிய ஆதித்யா எல்-1 விண்கலம் ஆனது பூமியின் சுற்றுவட்டப் பாதையில் சுற்றவிடப் படும்.
அதாவது, சந்திராயன் 3 விண் கலத்தை பூமியில் இருந்து உயரம் குறைக்கப்பட்டு, பூமியின் ஈர்ப்பு விசை பகுதியில் இருந்து மெதுவாக உயர்த் தியது போல, ஆதித்யா எல்-1 விண்கலத் தின் சுற்றுவட்ட பாதையை அதிகரிக்கும் பணியும் மெதுவாக நடைபெறும். ஆதித்யா எல்-1 விண்கலமானது பூமியின் சுற்றுப்பாதையில் 16 நாட்கள் இருக்கும். இந்த 16 நாட்களில் பூமியின் சுற்றுவட்டப்பாதை மெதுவாக அதி கரிக்கப்பட்டு, பூமியின் ஈர்ப்பு விசை பகுதியை ஆதித்யா எல்-1 கடக்கும்.
இதன்பிறகு, பூமியிலிருந்து சுமார் 1.5 மில்லியன் கிலோமீட்டர் (15 லட்சம் கி.மீ) தொலைவில் இருக்கும், சூரிய னுக்கும் பூமிக்கும் இடையே உள்ள லாக்ராஞ்சியன் புள்ளி-1 (எல்-1) வைக் கப்படும். இந்த முழு திட்டமும் முடி வடைவதற்கு கிட்டத்தட்ட நான்கு மாதங்கள் ஆகும் என்று கூறப்படுகிறது. இந்த லாக்ராஞ்சியன் புள்ளியை அடைந்த வுடன் ஆதித்யா எல்-1 விண்கலத்தில் உள்ள ஏழு பேலோடுகளும் செயல்படத் தொடங்கும். இந்த எல்-1 புள்ளியில் வைக்கப்படும். ஆதித்யா எல்-1 விண் கலத்தில் இருக்கும் நான்கு பேலோடுகள் சூரியனை நேரடியாகப் பார்க்கின்றன, மீதமுள்ள மூன்று பேலோடுகள் லாக் ரேஞ்ச் புள்ளி எல்-1 -அய் சுற்றி இருக் கக்கூடிய துகள்கள் பற்றிய ஆய்வுகளை மேற்கொள்கின்றன.
அதன்படி, சூரிய னில் இருந்து துகள்கள் விண்வெளியில் எவ்வாறு பயணிக்கின்றன என்பதைப் பற்றியும், குரோமோஸ்பியர் மற்றும் கரோனா உட்பட சூரியனின் மேல் வளி மண் டலத்தை ஆய்வு செய்தும் தகவலை அனுப்பும் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment