பெங்களூரு, செப்.19 சூரிய னின் சுற்றுவட்டப்பாதையின் முதல் புள்ளியை நோக்கிய பயணத்தை ஆதித்யா எல் 1 விண்கலம் தொடங்கியதாக இஸ்ரோ அறிவித்துள்ளது.
சூரியனை ஆய்வு செய் வதற்காக கடந்த 2ஆம் தேதி பி.எஸ்.எல்.வி. சி-57 ராக்கெட் மூலம் ஆதித்யா எல்-1 விண் கலம் விண்ணில் ஏவப்பட்டது. புறப்பட்ட 1 மணி நேரம் 3 நிமிடங்களில் ராக்கெட்டில் இருந்து ஆதித்யா எல்-1 விண்கலம் வெற்றிகரமாக பிரிந்தது. பின்னர், புவி வட்டப் பாதையில் தனது பயணத்தை தொடங்கிய விண்கலத்தின் உயரம் படிப்படியாக அதிகரிக் கப்பட்டு வருகிறது.
அந்த வகையில் ஏற்கெ னவே ஆதித்யா எல்-1 விண் கலத்தின் புவி சுற்று வட்டப் பாதை உயரம் 4 முறை அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ஆதித்யா எல்-1 விண்கலத்தின் புவி சுற்று வட் டப்பாதை உயரம் இன்றும் (19.9.2023) அதிகரிக்கப்பட் டுள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. அதன்படி, இன்று அதிகாலை 2.00 மணி யளவில் விண்கலத்தின் உயரம் 5வது முறையாக அதிகரிக்கப் பட்டுள்ளது.
இதுதொடர்பாக இஸ்ரோ தனது எக்ஸ் சமூக வலை தளத் தில், "ஆதித்யா-எல்1 மிஷன்: சன்-எர்த் எல்1 பாயிண்டிற்குச் சென்றது..!!Trans-Lagrangean Point 1 Insertion (TL1I) சுற்றுப் பாதை வெற்றிகரமாக அதி கரிக்கப்பட்டது.
விண்கலம் இப்போது சூரியன்-பூமி லி1 புள்ளிக்கு எடுத்துச் செல்லும் பாதையில் உள்ளது. இது சுமார் 110 நாள் களுக்குப் பிறகு ஒரு முயற்சியின் மூலம் எல்1 சுற்றுப்பாதையில் செலுத்தப்படும். இஸ்ரோ ஒரு பாதையில் உள்ள ஒரு பொருளை மற்றொரு விண் பொருளை நோக்கி விண் வெளியில் உள்ள இடத்திற்கு வெற்றிகரமாக மாற்றுவது இது தொடர்ந்து அய்ந்தாவது முறையாகும்" என்று அதில் பதிவிடப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment