ரூ.15 லட்சம் போடுறதா சொன்னீங்களே.. என்னாச்சு.. - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, September 23, 2023

ரூ.15 லட்சம் போடுறதா சொன்னீங்களே.. என்னாச்சு..

மாநிலங்களவையில் தி.மு.க. உறுப்பினர் இரா.கிரிராஜன் சரமாரியான கேள்விகள்

புதுடில்லி, செப். 23-  வெளிநாடுகளில் கருப்புப் பணத்தை மீட்டு ஒவ்வொரு குடிமகனின் வங்கிக் கணக்கிலும் ரூ.15 லட்சம் டெபாசிட் செய் யப்படுமென்ற பிரதமர் நரேந்திர மோடி வாக் குறுதி என்னவாயிற்று? -_ என பாஜக அரசுக்கு தி.மு.க. மாநிலங்களவை உறுப்பினர் இரா.கிரி ராஜன் சரமாரியாக கேள்வியெழுப்பினார்.

ஜி_20 நாடுகளின் மாநாட்டை வெற்றிகர மாக நடத்தி முடித்த கையோடு தற்போது நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத் தொடரை ஒன் றிய அரசு நடத்தி வரு கிறது. கடந்த 18ஆம் தேதி தொடங்கிய இந்த கூட் டத் தொடர் நிறை வடைந்தது.

இந்நிலையில் இந்த கூட்டத்தொடரில் பங்கேற்று, பேசிய தி.மு.க மாநிலங்களவை உறுப் பினர் இரா.கிரிராஜன், "தமிழ்நாட்டில் மக்க ளுக்கு அளித்த தேர்தல் வாக்குறுதி அனைத் தையும் திராவிட முன் னேற்ற கழக அரசு நிறை வேற்றி வருகிறது.

அதில் ஒன்றான, மக ளிருக்கு மாதம் ரூ.1000 வழங்கும் திட்டமான கலைஞர் மகளிர் உரி மைத் தொகை திட் டத்தை அறிமுகப்படுத்தி முதலமைச்சர் மு.க.ஸ்டா லின் இந்தியவிலேயே முன்மாதிரியாக விளங்கி கொண்டிருக்கிறார். மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட முன் னேற்ற கழக அரசு மக்களுக்கு அளித்த தேர் தல் வாக்குறுதிகளை நிறைவேற்றி இந்தியா விலே தமிழ்நாடு சிறந்த மாநிலமாக செயல்பட்டு வருகிறது.

ஆனால் ஒன்றிய பா.ஜ.க. அரசோ இது வரை மக்களுக்கு அளித்த தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றவில்லை. இது பா.ஜ.க அரசின் மிகப் பெரிய தேர்தல் ஜும்லாவாக உள்ளது.

வெளிநாட்டில் உள்ள பதுக்கி வைத்தி ருந்த கருப்புப் பணத்தை மீட்டு ஒவ்வொரு குடி மகனின் வங்கி கணக்கில் ரூ.15 லட்சம் டெபாசிட் செய்யப்படுமென்று பிரதமர் நரேந்திர மோடி மக்களுக்கு அளித்த வாக் குறுதி என்னவாயிற்று? அதேபோல அனைத்து நதிகளையும் இணைப்ப தாக வாக்குறுதி அளித் தார். அதுவும் இதுவரை நடக்கவில்லை. 

ஒவ்வொரு பட்ஜெட் டிலும் விவசாயிகள் வரு மானம் இரட்டிப் பாக்கப் படும் என்று வாக் குறுதி அளித்தார். மாறாக விவ சாயிகளின் கடன் அதி கரித்து அவர்களின் தற் கொலைகள்தான் இரட்டிப்பாகியுள்ளது.

படித்த இளைஞர்க ளுக்கு ஒவ்வொரு ஆண் டும் 2 கோடி புதிய வேலைகளை வழங்கு வோம் என்ற ஒன்றிய பா.ஜ.க. அரசின் வாக் குறுதி என்னவாயிற்று? தற்போது இந்தியாவில் வேலையில்லா பிரச் சினைத்தான் அதிகரித் துள்ளது.

கடந்த 10 ஆண்டு ஒன்றிய பா.ஜ.க. அரசின் தேர்தல் வாக் குறுதிகள் அனைத்தும் ஜும்லா வாக உள்ளது" என்று தி.மு.க. மாநிலங் களவை உறுப்பினர் இரா.கிரி ராஜன் விமர்சித் துள்ளார்.

No comments:

Post a Comment