குவைத், செப். 23- அறிவாசன் தந்தை பெரியார் அவர்களுடைய 145 ஆவது பிறந்தநாள் விழா தந்தை பெரியார் நூலகம் குவைத் சார்பாக நூலக காப்பாளர் சித்தார்த்தன் ஏற்பாட்டில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.
தாய்மண் கலை இலக்கியப் பேரவை மற்றும் விடுதலை சிறுத் தைகள் கட்சியின் பொறுப்பாளர் அன்பரசன் அவர்கள் தலைமை ஏற்க மறுமலர்ச்சி திராவிட முன் னேற்றக் கழகம் டி.எம்.சி.ஏ. பொறுப்பாளர் குவைத் நகரத் தந்தை என்று அழைக்கப்படும் அசன் முகமது மற்றும் திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்த மேட்டுப்பட்டி ராஜா முகமது அவர்கள் முன்னிலையில் மாலை 6 மணி அளவில் சிறப்பாக நிகழ்ச்சி நடைபெற்றது.
விடுதலை சிறுத்தைகள் கட்சி யைச் சார்ந்த அறிவழகன் மற்றும் மகிழன், திராவிட முன்னேற்றக் கழகம் குவைத் தளபதி பேரவை யைச் சார்ந்தசரவணன், திராவிட முன்னேற்றக் கழக முன்னோடி திராவிட வேங்கை பட்டம் பெற்ற ஒரத்தநாடு பாப்பா தியாகராஜன், வெளிநாட்டு வாழ் தமிழர் நல வாரிய அமைப்பைச் சார்ந்த நெல்லை மரக்காயர் அவர்கள் நிகழ்ச்சியில் பங்கேற்று அறிவா சான் தந்தை பெரியாரின் கருத்து களை ஓங்கி ஒலித்தனர்.
"குடியரசு' விருது பெற்ற தமிழ் நேசன் ஆசிரியர் அமானுல்லா சனாதானத்தை பற்றியும் சங்பரி வார் அமைப்புகளின் எதிர்கால திட் டமிடுதலையும் தந்தை பெரியாரின் கருத்துகளை எடுத்துரைத்தார். தஞ்சை தீனா நன்றியுரை கூற தந்தை பெரியாரின் கொள்கைக்கு ஏற்ப மாட்டிறைச்சி அனை வருக்கும் வழங்கப்பட்டு நிகழ்ச்சி நிறைவு பெற்றது.
No comments:
Post a Comment