புவனகிரி, செப். 27- கடலூர் மாவட்டம் சிதம்பரம் கழக மாவட்டம் பாளையங்கோட்டையில் தந்தை பெரியார் பிறந்தநாள் முன்னிட்டு கொடியேற்று விழா மற்றும் தெருமுனைப் பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு திருமுட்டம் ஒன்றிய தலைவர் பெரியண்ணசாமி தலைமை வகித்தார். மாவட்ட இளைஞரணி செயலாளர் பஞ்ச நாதன் பகுத்தறிவாளர் மாவட்ட தலைவர் நெடுமாறன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் மாவட்ட இணை செய லாளர் கழகப் பேச்சாளர் யாழ் திலீபன் சிறப்புரை ஆற்றினார்.
தந்தை பெரியாரின் சிறப்புகளை யும் அவர் தமிழ் சமூகத்திற்கு ஆற்றிய தொண்டுகள் பற்றியும் எடுத்துரைத்தார். தந்தை பெரியார் மறைந்து 50 ஆண்டுகள் ஆனாலும் இன்னும் பெரியார் பெயரை கேட் கும் போது பார்ப்பன கூட்டம் பதறி ஓடுகிறது, கதறி நடுங்குகிறது. ஏனென்றால், அவர்தான் அவர்க ளின் மூலத்தை கண்டு தகர்த் தெறிந்தார்.
எந்த தலைவர்களுக்கும் இல்லாத துணிச்சல் தந்தை பெரியார் ஒருவருக்கு மட்டுமே இருந்தது வியக்கத்தக்கது என்றும், தமிழர் தலைவர் ஆசிரியர் அவர் கள் இன்று பெரியார் கொள்கையை லட்சியத்தை எப்படி எல்லாம் வென்றெடுத்து வருகிறார், இந்த கொள்கை தத்துவத்தை உலகம் முழுவதும் கொண்டு செல்ல எப் படி செயலாற்றுகிறார் என்பதை எல்லாம் எடுத்துக்காட்டி உரை யாற்றினார்.
இந்த திராவிட மாடலை வென் றெடுக்க இந்த ஆட்சியை பாது காக்க கழக தலைவர் தமிழர் தலை வர் ஆசிரியர் அவர்கள் ஆற்றி வரும் பணிகளை பட்டியலிட்டு உரையாற்றினார்.
நிகழ்ச்சியில் மாவட்ட துணைத் தலைவர் மழவை கோவி. பெரியார் தாசன் காட்டுமன்னார்குடி ஒன் றிய செயலாளர் முருகன் மாவட்ட அமைப்பாளர் தென்னவன் திமுக பொறுப்பாளர்கள் மணி ராஜேந் திரன் தனபால் மற்றும் காட்டுமன் னார்குடி நகரத் தலைவர் பொன் பஞ்சநாதன் காட்டுமன்னார்கோ யில் ஒன்றிய செயலாளர் கீழ்க் கடம்பூர் சண்முகசுந்தரம், டெய்லர் பன்னீர்செல்வம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment