17.9.2023 அன்று 10 மணிக்கு பெரியார் சதுக்கத்தில் தந்தை பெரியார் படத்தை அலங்கரித்து மாலையிட்டு ஸநாதனத்திற்கு எதிராகவும், குலத்தொழில் செய்யத் தூண்டும் பிரதமர் மோடியின் "விஸ்வகர்மா” திட்டத்திற்கு எதிராகவும் தோழர் கள் ஒலி முழக்கங்களை எழுப்பினர்! தாராவி மேனாள் நகர்மன்ற உறுப்பினரும் பெரியார் சதுக்கம் அமைக்க பெருந்துணையாக இருந்தவருமான அனுமந்தா நந்தப் பள்ளி பெரியார் படத் திற்கு மாலை அணிவித்து சிறப்பு செய்தார், தோழர்கள் பொது மக்களுக்கு இனிப்பு வழங்கினர்.
மாலை 7 மணிக்கு தாராவி கலைஞர் மாளிகையில் பிறந்த நாள் விழா கூட்டம் தொடங்கியது இந்த விழாவுக்கு மும்பை கழக தலைவர் பெ. கணேசன் தலைமை வைத்தார். மும்பை கழக செயலாளர் இ. அந்தோணி வரவேற்றார், மும்பை திராவிட முன்னேற்றக் கழக மாநகர அவைத் தலைவர் வே.ம. உத்தமன், தி.மு.க.மூத்த தலைவர் என்.வி. சண்முகராஜன் , செ.பிரசாத், அலி முகமது, க.ராஜன் மராட்டிய மாநில திமுக இளைஞரணி துணை அமைப்பாளர் உ.அமரன் உள்ளிட்ட வர்கள் நிகழ்ச்சிக்கு முன்னிலை வகித்தனர்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தாராவி கிளைச் செயலா ளர் ஞான. அய்யாப்பிள்ளை, மும்பை கழகப் பொருளாளர் தோழர் அ.கண்ணன், கழகச் செயல்வீரர் பெரியார் பாலாஜி, மும்பை துணைச் செயலாளர் ஜெ.வில்சன், கழக ஆரவாளர் ந. வளர்மதி உள்ளிட்டோர் உரைக்குப்பின் மும்பை பகுத்தறி வாளர் கழகத் தலைவர் அ. இரவிச்சந்திரன் நிறைவுரையாற் றினார்.
இறுதியில் அ.குணசேகரன் நன்றி கூறினார்.
இந்த நிகழ்வில் ஜெய்பீம் அறக்கட்டளை தோழர்கள் சுரேஸ்குமார், இராஜா குட்டி, சஞ்சய், விக்ரம் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
தந்தை பெரியார் பிறந்தநாள் சுவரொட்டிகள் நகரில் பல இடங்களில் நல்லமுறையில் ஒட்டப்பட்டன. சயான் மருத்துவமனையில் மும்பை கழகத் தலைவர் பெ.கணேசன், செயலாளர் இ.அந்தோணி துணைச்செயலாளர் ஜே.வில்சன் உள்ளிட்டோர் குருதிக்கொடை வழங்கினர்.
தானே
தந்தை பெரியார் அவர்களின் 145ஆவது பிறந்தநாள் விழா மும்பை தானே மாவட்டம் அமர்நாத் கிழக்கு பகுதியில் உள்ள "தம்மம்ம தீப் புத்த விகாரில்" மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டது.
தந்தை பெரியார் பிறந்த நாளும், டாக்டர் அம்பேத்கர் அவர்களின் மகன் பையாசாகேப் என்ற யஷ்வந்த் ராவ் பீம்ராவ் அவர்களின் 46ஆவது ஆண்டு நினைவு நாளும் கடைப்பிடிக்கப்பட்டது. இதில் புத்த விகாரின் தலைவர் இந்திரா பால் காம்பிளே மாலை அணிவித்து மரியாதை செய்தார், செயலாளர் பாபா சாகேப் காம்பிளே நயினார் வேலுமயில், மற்றும் ஜெயசிங் உட்பட பலர் கலந்து கொண்டனர் இறுதியில் இந்த பவுத்த விகாரின் பொருளாளர் அஜித் சோப்டே நன்றி கூறினார். நிகழ்வு இனிதே நடைபெற்றது .
மும்பை சயான் கோலிவாடா
மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நல சங்கம் இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப் பாளர்கள் எட்ஷிவ்சங்கர் சிங் யாதவ், சட்ட ஆலோசகர் டாக்டர் பிரம்மானந்த யாதவ், ராம்நாத் பாட்டீல் மண்டல தலைவர் ரயில்வே ஒ.பி.சி யூனியன், அஜய் பால், ஒ.பி. பைர்வா மண்டல செயலாளர் ரயில்வே எஸ்.சி /எஸ்.டி யூனியன்,ரமகாந்த் மல்லா, அமர் பகதூர் பட்டேல் மண்டல் செயல் தலைவர் ஓ.பி.சி. ரயில்வே யூனியன், மும்பை பகுத்தறி வாளர் கழகத்தலைவர் அ.இரவிச்சந்திரன் மும்பை திராவிடர் கழக தோழர் பெரியார் பாலாஜி உட்பட பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். பெரியார் பிறந்த நாள் விழா மிக சிறப்புடன் நடைபெற்றது.
விழாவுக் காண அனைத்து ஏற்பாடுகளையும் லால்மணி மவுரியா, தேவேந்திர யாதவ் போன்றவர்கள், சிறப்பாக செய்திருந்தார்கள் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். விழா சிறப்போடு நிறைவேறியது!
No comments:
Post a Comment