பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தில் தந்தை பெரியார் அவர்களின் 145ஆவது பிறந்த நாளில் 500 மரக்கன்றுகள் நடும் விழா - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, September 27, 2023

பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தில் தந்தை பெரியார் அவர்களின் 145ஆவது பிறந்த நாளில் 500 மரக்கன்றுகள் நடும் விழா

வல்லம். செப். 27- தந்தை பெரியார் அவர்களின் 145ஆவது பிறந்த நாளை முன்னிட்டு பெரியார் மணியம்மை நிகர் நிலைப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர் ஊராட்சிக்குட்பட்ட பிள்ளையார்பட்டி பஞ்சாயத்து மற்றும் திருவாரூரைச் சேர்ந்த வனம் தன்னார்வத் தொண்டு நிறுவனம் ஆகியோர் இணைந்து பிள்ளையார்பட்டி நுண்ணுயிர் உர நிலையம் அருகே ஓர் ஏக்கர் பரப்பளவில் உள்ள வெற்று நிலத்தில் குறுங்காடு அமைக்கும் திட்டத்தின் கீழ் 500 மரக் கன்றுகள் நடப்பட்டன.

இந்நிகழ்ச்சிக்கு பல்கலைக் கழக ஆட்சிக்குழு மன்ற உறுப் பினர் வீ.அன்புராஜ் முன்னிலை வகிக்க, பிள்ளையார்ப்பட்டி ஊராட்சி மன்றத் தலைவர் உதயகுமார் தலைமை வகித்தார். 

பெரியார் மணியம்மை பல் கலைக்கழகத்தின் பொறியியற் துறை  மாணவர்கள் 181 பேர் கலந்து கொண்டனர். 

சிறப்பு விருந்தினர்களாக தஞ்சை சட்டமன்ற உறுப்பினர் டி.கே.ஜி.நீலமேகம், தஞ்சை மாநகர மேயர் சண்.இராம நாதன், தஞ்சை மாநகர துணை மேயர் மருத்துவர் அஞ்சுகம் பூபதி, பல்கலைக்கழக துணை வேந்தர் பேராசிரியர் செ.வேலு சாமி, பல்கலைக்கழக பதிவாளர் பேராசிரியர் பி.கே.சிறீவித்யா, தஞ்சை மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் பி.எஸ்.டி உதயன், தஞ்சை ஒன்றிய துணைப் பெருந்தலைவர் டி.அருளானந்தசாமி மற்றும் தஞ்சை கிழக்கு ஒன்றிய செயலாளர்  சோம. செல்வகுமார் ஆகியோர் கலந்து கொண்டனர். 

பல்கலைக்கழக துணை வேந்தர் தமிழரின் இயற்கை வாழ்க்கை முறை குறித்து பேசி காடுகளின் முக்கியத்துவம் குறித்து பேசி அனைவரையும் வரவேற்றார். 

வாழ்த்துரையின்போது பெரியாரின் சமத்துவ கொள்கை போல இந்த குறுங்காடுகளும் மியாவாக்கி முறை காடுகளும் சமத்துவமாய் உயிரிகளின் சார்புற்று வாழ்கிறது.

அதுவே மரங்களின் சிறப்பு என்றும் 85 குறுங்காடுகள் அமைத்த வனம் கலைமணி அவர்களின் பணியும் ஊராட்சி மன்ற தலைவரின் சமூக தொண் டும் மென்மேலும் வளர வாழ்த் தினார். 

தமிழ்நாடு அரசின் சீரிய செயல்பாடுகளில் இயற்கையைப் பாதுகாத்தல் குறித்த நடவடிக் கைகள் மற்றும் விளையாட்டுத் துறை மேம்பாடு ஆகியவை முக்கியமானது என்றும் அது குறித்த திட்டங்கள் குறித்தும் விளக்கி இந்நிகழ்வை வாழ்த் தினார். 

தஞ்சை மாநகர் மேயர் சண்.ராமநாதன் பல்கலைக் கழகத்தின் தொடர் இயற்கை பேணுதல் மற்றும் சமுதாய நற் செயல்பாடுகள் குறித்து பேசி பாராட்டினார். 

தஞ்சை மாநகர துணை மேயர் மருத்துவர் அஞ்சுகம் பூபதி பெரியாரின் ஜாதி மத பேதமற்ற சித்தாந்தமும், சமூக செயல்பாடும் பல்கலைக்கழகத் திலும் அப்படியே தொடர்வது மகிழ்ச்சி அளிக்கிறது என்றும் வனம் கலைமணி அவர்களின் சிறிய முயற்சியை பாராட்டியும் ஊராட்சி மன்ற தலைவரின் சமூக முன்னெடுப்புகளை வாழ்த்தியும் வாழ்த்துரை வழங் கினார்.

தஞ்சாவூர் சட்டமன்ற உறுப் பினர் டி.கே.ஜி.நீலமேகம், மேலும் தஞ்சை கிழக்கு ஒன்றிய செயலாளர் சோம.செல்வகுமார் மற்றும் ஒன்றிய துணை பெருந் தலைவர் டி.அருளானந்தசாமி வாழ்த்துரை வழங்க, ஊராட்சி மன்ற உறுப்பினர் பி.ஆனந்த சேகரன் அனைவருக்கும் நன்றி சொல்லி நன்றி உரை வழங் கினார். 

பின்னர் சிறப்பு விருந்தினர் கள் மரக்கன்றுகளை நட்டனர். இந்நிகழ்வின் போது பெரியார் மணியம்மை நிகர்நிலை பல் கலைக்கழக நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்களின் பனை விதை விதைப்பு குறித்த பணிகள் பேசப்பட்டு வாழ்த்தப்பட்டது.

No comments:

Post a Comment