பெண்களுக்கு எதிரான கட்சி பா.ஜ.க.: காங்கிரஸ் கடும் குற்றச்சாட்டு!
போபால், செப். 29- மத்தியப் பிரதேசத்தில் சிவ்ராஜ் சிங் சவுகான் தலைமையிலான பா.ஜ.க. ஆட்சி நடைபெறுகிறது. இந்த மாநிலத்தின் உஜ்ஜைனி நகரத்தில் இருந்து சுமார் 15 கிலோ மீட்டர் தொலை வில் உள்ள பட்நகர் சாலையில் 12 வயது சிறுமி அரை நிர்வாண கோலத்துடன் வீடு வீடாகச் சென்று உதவி கோரும் காட்சி அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.
சிறுமியை விரட்டியடித்துள்ளனர்
அந்த சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட பிறகு ரத்தம் சொட்ட சொட்ட சென்று, ஒவ்வொரு வீடாக கதவைத் தட்டி உதவி கோரியுள்ளார். ஆனால், சிறுமியை விரட்டியடித்துள்ள னர்.
இறுதியில் ஆசிரம நிர்வாகிகள் சிறுமியை மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.
சிறுமியை மருத்துவர்கள் பரி சோதனை செய்தபோது அவர் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப் பட்டது தெரியவந்தது.
சிறுமியின் உடலில் காணப்பட்ட காயங்கள் தீவிரமாக இருந்ததால் அவர் மேல் சிகிச்சைக்காக இந்தூருக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
மணிப்பூர் கலவரத்தின் போது 2 பழங்குடியின பெண்கள் ஒரு கும்பலால் இழுத்து செல்லப்பட்டு பாலியல் வன் கொடுமை செய்யப்பட்ட காட்சிப் பதிவு வெளியாகி நாடு முழுவதும் அதிர்வலை களை உருவாக்கியது. இந்த நிலையில், பா.ஜ.க. ஆளும் மத்தியப்பிரதேசத்தில், பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சிறுமி உதவி கேட்டுச் செல்லும் காட்சிப் பதிவு சமூக வலைதளங்களில வெளி யாகி மீண்டும் மக்களிடையே கொந் தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
மல்லிகார்ஜூன கார்கே
மத்தியப் பிரதேசத்தில் நடந்த கொடூர சம்பவத்தைக் குறிப்பிட்டு, பெண்களுக்கு எதிரான கட்சி பா.ஜ.க. என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கடுமையாக விமர்சித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள சமூகவலைதள பதிவில், பெண்களுக் கான இட ஒதுக்கீடு பற்றி ஊர் ஊராகச் சென்று பேசி கைதட்டல் வாங்க மோடி முயற்சிக்கிறார். ஆனால் பா.ஜ.க. ஆளும் மத்தியப்பிரதேசத்தில் 12 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப் பட்டிருக்கிறார்.
பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை வழக்குகள் அதிகம் பதிவாவது பா.ஜ.க. ஆளும் மத்தியப் பிரதேசத்தில்தான். ஒவ்வொரு நாளும் 8 வல்லுறவு வழக்குகள் பதிவாகின்றன. பிரதமர் மோடியும் மாநில முதலமைச்சர் சிவ்ராஜ் சிங்கும் தேர்தல் பிரச்சாரத்தை விட்டுக் கொஞ்சம் வந்தால், மத்தியப் பிரதேச பெண்களின் அலறல் சத்தத்தை அவர்கள் கேட்க முடியும் என்று மல்லி கார்ஜுன கார்கே குறிப்பிட்டுள்ளார்.
கமல்நாத்
இந்த சம்பவத்தை குறிப்பிட்டு மத் தியப் பிரதேச மேனாள் முதலமைச்சரும், காங்கிரஸ் தலைவருமான கமல்நாத் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில், “12 வயது சிறுமி பாலியல் வல்லுறவுக்குள்ளாகி ரத்தம் வழிய வீடு வீடாகச் சென்று ஒரு மணி நேரமாக உதவி கேட்டும் யாரும் உதவ முன்வராத அதிர்ச்சி சி.சி.டி.வி. காட்சிதான் இது என்று குறிப்பிட்டுள்ளார். பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்திற்கு மாநில பா.ஜ.க. அரசு ஒரு கோடி ரூபாய் நிவாரணத் தொகை வழங்கவேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.
No comments:
Post a Comment