அரக்கோணத்தில் 120 மாணவர்களுடன் தொடங்கியது பெரியாரியல் பயிற்சிப் பட்டறை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, September 9, 2023

அரக்கோணத்தில் 120 மாணவர்களுடன் தொடங்கியது பெரியாரியல் பயிற்சிப் பட்டறை


அரக்கோணம்,செப்.9-
ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் அம்பேத்கர் பவன் அரங்கத்தில் 110 மாணவர்களுடன் இன்று (9.9.2023) தொடங்கிய பெரியாரி யல் பயிற்சிப் பட்டறைக்கு வருகைபுரிந்த அனைவரையும் வரவேற்று பகுத்தறிவா ளர் கழக  மாவட்ட செயலாளர் நா.ராமு உரையாற்றினார். மாவட்ட தலைவர் சு.லோகநாதன் தலைமை யேற்று உரையாற் றினார்.

மாவட்ட அமைப்பாளர் சொ.ஜீவன் தாஸ், மாவட்ட துணை தலைவர் பொன். வெங்கடேசன், கழக சொற்பொழிவாளர் சங்கர், மகளிர் அணி பொறுப்பாளர் பிரேமா, அம்பேத்கர் பவன் பொறுப் பாளர் மோகன், பெல்.சின்னத்துரை, மாவட்ட செயலாளர் செ. கோபி, பாவேந்தர் தமிழ் மன்ற பொறுப்பாளர் கள் தமிழ்கனல், பாண்டியன், தமிழ்ச் செல்வன், பேராசிரியர் வீரமணி ஆகி யோர் முன்னிலை ஏற்று உரையாற்றினர்.

கழக காப்பாளர் பு.எல்லப்பன் தொடக்க உரையாற்றினார். கழக பொருளாளர் 

வீ. குமரேசன் பயிற்சிப் பட்டறை தொடங்கி வைத்தார்.

திராவிடர் கழக மாநில ஒருங்கிணைப் பாளர், பெரியாரியல் பயிற்சி பட்டறை பொறுப்பாளர் இரா.ஜெயக்குமார் ஒருங்கி ணைத்து நடத்தினார்.

கழக துணைப் பொதுச் செயலாளர் 

ச.பிரின்சு என்னாரெசு பெரியார் தந்தை பெரியார் ஓர் அறிமுகம் என்ற தலைப்பில் முதல் வகுப்பெடுத்தார். தொடர்ந்து  கழக துணை பொதுச்செயலாளர் வழக் குரைஞர் சே.மெ.மதிவதனி ‘பெரியாரின் பெண் விடுத லைச் சிந்தனைகள்’ என்ற தலைப்பிலும், கழகப் பொருளாளர் வீ. குமரேசன் ‘தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் சாதனைகள்’ என்ற தலைப்பிலும், பகுத்தறிவாளர் கழக ஊடகப்பிரிவு தலைவர் மா.அழகிரிசாமி ‘சமூக ஊடகங்களில் நமது பங்கு’ என்ற தலைப்பிலும், வழக்குரைஞர் சு.குமார தேவன் தந்தை பெரியாரும் ஜாதி ஒழிப்பும் என்ற தலைப்பிலும், கழகப் பிரச்சார செயலாளர் வழக்குரைஞர் அ.அருள் மொழி இந்து இந்துத்துவா சங்பரிவார் ஆர்எஸ்எஸ் என்ற தலைப்பிலும்,   கழக துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங் குன்றன் பார்ப்பனப் பண்பாட்டு படையெடுப்புகள் என்ற தலைப்பிலும்  வகுப்பு எடுத்தனர்.


No comments:

Post a Comment