அண்ணா 115ஆம் ஆண்டு பிறந்த நாளையொட்டி உலகத் தமிழாராய்ச்சி நிறுவன நூல்கள் தள்ளுபடி விற்பனை அறிவிப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, September 27, 2023

அண்ணா 115ஆம் ஆண்டு பிறந்த நாளையொட்டி உலகத் தமிழாராய்ச்சி நிறுவன நூல்கள் தள்ளுபடி விற்பனை அறிவிப்பு

சென்னை,செப்.27- அண்ணாவின் பிறந்தநாளையொட்டி வருகிற அக்டோபர் 15 ஆம் தேதி வரை 30 முதல் 50 சதவீத தள்ளுபடி விலை யில் உலகத்  உலகத் தமிழாராய்ச்சி நிறுவன நூல்கள் விற்பனை செய் யப்படுகின்றன. 

இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட் டுள்ளதாவது:

உலகத் தமிழாராய்ச்சி நிறுவ னத்தால் வெளியிடப்பட்டுள்ள இலக்கணம், இலக்கியம், மருத்து வம், காலக்கணிதம் ஆகியப் பொருண்மைகளில் அமைந்த நூல்கள் மற்றும் அரிய நூல்கள், பாரதியார் சித்திரக் கதைகள், பாரதி வாழ்க்கை வரலாறு, அரசுப் போட்டித் தேர்வுகளுக்கான கருவி நூல்கள் ஆகியன தமிழ் ஆய்வினை மேற்கொள்ளும் மாண வர்கள், தமிழார்வலர்கள் மற்றும் பொதுமக்கள் பயன்பெறும் வகை யில் அண்ணாவின் பிறந்த நாளை சிறப்பிக்கும் வகையில் 2023 செப் டம்பர் 15 ஆம் நாள் முதல் அக் டோபர் 15ஆம் நாள் வரை 30 முதல் 50 விழுக்காடு கழிவு விலை யில் விற்பனை செய்யப்படவுள்ளது.

நூல் விற்பனை நாள்தோறும் காலை 10 மணி முதல் மாலை 5.30 மணி வரை நிறுவன வளாகத்தில் நேரடியாக நடைபெறும். எழும் பூரிலுள்ள தமிழ் வளர்ச்சி இயக்க கத்தில் அமைக்கப்பட்டுள்ள உல கத் தமிழாராய்ச்சி நிறுவன நூல் விற்பனை நிலையத்திலும் நடை பெறும். நூல்கள் பற்றிய விவரங்கள் அறிய www.ulakaththamizh.in என்ற இணைய முகவரியில் தெரிந்து கொள்ளலாம்.

இணைய வழியில்  (Internet Banking) தொகை செலுத்தும் முறை 

வங்கி கணக்கு பெயர் – NATIONAL INSTITUTE OF TAMIL STUDIES

கணக்கு எண் – 33068172999

அய்எப்எஸ்சி (IFSC) குறியீடு எண்  – ஷிஙிமிழி0013361

இந்த அரிய வாய்ப்பினை அனைவரும் பயன்படுத்திக் கொள் ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகிறது. 

மேலும் விவரங்களுக்கு,

உலகத் தமிழாராய்ச்சி நிறுவ னம், இரண்டாம் முதன்மைச் சாலை, மையத் தொழில்நுட்பப் பயிலக வளாகம், தரமணி, சென்னை – 600 113.

தொடர்புக்கு:

044-22542992, 044 – 22541436 / 9600021709. 


No comments:

Post a Comment