சனாதான தர்மத்தினை இழிவாகப் பேசியதாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைக்கு விலை வைத்த சாமியாரை கிண்டல் செய்து பேசியுள்ளார் அமைச்சர் உதயநிதி.
செப்டம்பர் 2 ஆம் தேதி தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் நடத்திய சனாதான ஒழிப்பு மாநாட்டில் தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று பேசிய கருத்துகள் தேசிய அளவில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
அமைச்சர் உதயநிதி மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ள நிலையில், அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என டில்லி பாஜக அலுவலகம் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்குக் கடிதம் எழுதி யுள்ளது.
இதற்கிடையே அயோத்தி சாமியார் பரமஹம்ச ஆச்சாரியா என்பவர் அமைச்சர் உதயநிதியின் தலைக்கு ரூ.10 கோடி கொடுப்பதாக அறிவித்துள்ளது மேலும் சர்ச்சையாகி உள்ளது.
இதுகுறித்து பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் “எனது தலையை சீவுவதற்கு எதற்கு ரூ.10 கோடி? 10 ரூபாய் சீப்பு போதுமே, நானே சீவிக்கிட்டு போயிடு வேன்!” என கிண்டலாக கூறியுள்ளார்.
உனக்கு எப்படி ரூ.10 கோடி வந்தது?
மேலும் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ''எனது தலைக்கு இந்த சாமியார் ரூ.10 கோடி விலை வைத்துள்ளார். என் தலை மீது அவருக்கென்ன ஆசை? சரி, நீ சாமியார் என்றால் உனக்கு எப்படி ரூ.10 கோடி வந்தது? நீ உண்மையான சாமியாரா? போலி சாமியாரா?” என்று பேசியுள்ளார்.
No comments:
Post a Comment