கரோனா காலத்தில் பணியாற்றிய மருத்துவர்களுக்கு ஊக்க மதிப்பெண் அளிக்க அரசு ஆணை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, August 21, 2023

கரோனா காலத்தில் பணியாற்றிய மருத்துவர்களுக்கு ஊக்க மதிப்பெண் அளிக்க அரசு ஆணை

சென்னை, ஆக. 21- தமிழ்நாட் டில் சுகாதாரத் துறைச் செயலர் ககன்தீப் சிங் பேடி வெளியிட்ட அரசாணையில் கூறியிருப்பதாவது: 

தமிழ்நாட்டில் காலியாக உள்ள 1,021 உதவி மருத்துவர் பணியிடங்களை, மாநில மருத்து வப் பணியாளர் தேர்வாணையம் மூலம் நிரப்ப நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதற் கான எழுத்துத் தேர்வு அண்மை யில் நடைபெற்றது.

இவ்வாறு மருத்துவர் பணியிடங்களை நிரப்பும்போது, கரோனா பேரிடர் காலத்தில் பணியாற்றிய மருத்துவர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்றும், ஊக்க மதிப்பெண் வழங்க வேண்டும் என்றும் கோரி சென்னை உயர் நீதிமன்றத் தில் 14 பேர் மனு தாக்கல் செய்த னர். இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், உதவி மருத்து வர் பணியிடங்களுக்கான தேர்வு முடிவுகளை அறிவிக்க இடைக்காலத் தடை விதித்தது. 

இந்த சூழலில், பல்வேறு தரப்பினரின் கோரிக்கைகளை யும், பரிந்துரைகளையும் கவன மாகப் பரிசீலித்து, கரோனா பேரிடர் காலத்தில் சேவையாற் றிய மருத்துவர்களுக்கு, அந்தப் பணியிடங்களில் சேர ஊக்க மதிப்பெண் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, 6இ-ல் இருந்து 12 மாதங்கள் வரை பணியாற்றியவர்களுக்கு 2 மதிப்பெண்ணும், 12இ-ல் இருந்து 18 மாதங்கள் வரை பணியாற்றி யோருக்கு 3 மதிப்பெண்ணும், 18இ-ல் இருந்து 24 மாதங்கள் பணியாற்றியவர்களுக்கு 4 மதிப் பெண்ணும், 24 மாதங்களுக்கு மேல் சேவையாற்றியோருக்கு 5 மதிப்பெண்ணும் கூடுதலாக வழங்கப்பட உள்ளன. எனினும், 1,021 உதவி மருத்துவர் பணியிடங்களுக்கு நடத்தப்பட்ட தமிழ் தகுதித் தேர்வில் தேர்ச்சிய டைந்தவர்களுக்கு மட்டுமே இது பொருந்தும். 

தகுதியானவர்கள், தங்களது சேவையை உறுதி செய்யும் வகை யில் கரோனா பணிச் சான்றி தழை சம்பந்தப்பட்ட அதிகாரிக ளிடம் பெற்று, அரசிடம் சமர்ப் பிக்க வேண்டும். 

அதனடிப்படையில் அதற்கு அடுத்த இரு வாரங்களில் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும். மருத்துவர் பணியிடங்கள் மட்டு மல்லாது, அனைத்து சுகாதாரப் பணியிடங்கள் நியமனத்திலும், கரோனா ஊக்க மதிப்பெண் வழங்க முடிவு செய்யப்பட் டுள்ளது. இவ்வாறு அரசாணை யில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment