சென்னை, ஆக.24 ஆரம்பக் கல்விக்கு முந்தைய கல்வியை வழங்கும் லிட்டில் எல்லி பிரீ-ஸ்கூல் குழுமம் மழலையர் கல்வி அளிப்பதில் முன்னணியில் திகழ்கிறது. இது தனது செயல்பாடுகளைக் கணிசமாக அதிகரிக்கத் திட்டமிட்டு சென்னை, அய்தராபாத், வட கருநாடக பிராந்தியங்களில் புதிய கல்வி மய்யங்களைத் தொடங்கத் திட்டமிட்டுள்ளது.
புத்தாக்க சிந்தனைகளையும், குழந்தைகளின் மனதில் கற்பனைத் திறனையும், சிக்கலான தருணங்களில் முக்கிய முடிவு எடுக்கும் ஆற்றலையும் வளர்ப்பதோடு சிறந்த மாணவர்களாக அவர்களை உருவாக்கும் சூழ்நிலையை உருவாக்கும் வகையிலான மய்யங்களை அமைக்கத் திட்டமிட்டுள்ளது.
இதுகுறித்து இந்நிறுவன இயக்குநர் பிரீத்தி பண்டாரி கூறுகையில், குழந்தைகளுக்கு மிகவும் வலுவான கல்வி அடித்தளத்தை அளிப்பதில் இத்தகைய மழலையர் பள்ளிகளுக்கு முக்கிய பங்கு உண்டு என்பதை பெற்றோர்கள் அறிந்திருப்பதும் முக்கியக் காரணமாகும். குழந்தைகளுக்கு மிகவும் உகந்த சூழலில் கல்வியை அளிப்பது, விளையாட்டுடன் அவர்கள் கற்பதற்கான சூழலை முழு அளவில் அளிப்பதை நோக்கமாகக் கொண்டு குழுமம் செயல்படுகிறது” என்று குறிப்பிட்டார்.
No comments:
Post a Comment