ஏட்டுத் திக்குகளிலிருந்து..., - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, August 7, 2023

ஏட்டுத் திக்குகளிலிருந்து...,

 கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்

7.8.2023

டெக்கான் கிரானிக்கல்,அய்தராபாத்:

* உச்ச நீதிமன்ற தீர்ப்பால் ராகுலுக்கு மீண்டும் எம்பி பதவியை மக்களவை தலைவர் இன்று அறிவிப்பாரா? நம்பிக்கையில்லா தீர்மானம் மீது நாளை விவாதம்; மழைக்கால தொடரின் பரபரப்பான கடைசி வாரம்

டெக்கான் கிரானிக்கல்,சென்னை:

* தமிழ்நாட்டில் உயர்கல்வியை ஊக்கப்படுத்துகிறோம். ஆராய்ச்சிக் கல்வியாக தரம் உயர்த்துகிறோம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்

நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:

* மணிப்பூர் மாநிலத்தில் பாஜக அரசுக்கான ஆதரவை திரும்பப் பெறுவதாக குக்கி மக்கள் கூட்டணி அறிவிப்பு

* கடந்த 10 ஆண்டுகளாக, எதிர்மறை அரசியலை மட்டுமே செய்துள்ள பிரதமர் மோடி, இப்போது இந்தியாவுக்காக கசப்பான வார்த்தைகளை பேசுகிறார் என மல்லிகார்ஜூனா கார்கே சாடல்.

* பார்ப்பன மதத்தை ஹிந்து மதமாக பாஜக கருதுகிறது.ஹிந்து மதம் என்று எதுவும் இல்லை என சமாஜ்வாதி கட்சியின் தலைவர் சுவாமி பிரசாத் மவுரியா பேச்சு.

* சென்னைப் பல்கலைக்கழகம் மற்றும் அதனுடன் இணைந்த கல்லூரிகளில் படிக்கும் 1.85 லட்சம் மாணவர் களில் 50% பேர் பெண்கள். தங்கப் பதக்கம் பெற்ற 105 மாணவர்களில் 70% பேர் பெண்கள் என பாலின சமத்துவத்தை உறுதிப்படுத்துவது அறிந்து மகிழ்ச்சி என குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு புகழாரம்.

தி இந்து:

* 2024 மக்களவைத் தேர்தலில் தலித், முஸ்லிம், ஈபிசி வாக்குகளை பெறுவதற்காக பீகாரில் நிதிஷ் குமாரின் ஜேடி(யு) மூன்று பிரச்சார இயக்கங்கள் தொடங்கியுள்ளது.

தி டெலிகிராப்:

* 2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கான முன்கூட்டியே ஆயத்தப் பணிகளை காங்கிரஸ் தொடங்கியது. கூட்டணி அமைப்பதில் கட்சி விதிவிலக்கான நெகிழ்வுத்தன்மையை வெளிப்படுத்தி வருகிறது.

* புகழ்பெற்ற தெலுங்கானா நாட்டுப்புற, புரட்சிகர பாடகருமான கத்தார் மறைவு.

- குடந்தை கருணா


No comments:

Post a Comment