வேலூர், ஆக. 8- வேலூர் மாவட்ட திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டம் 4.8.2023 அன்று மாலை 5 மணிக்கு, குடி யாத்தம் பெரியார் அரங் கத்தில் வேலூர் மாவட்ட தலைவர் இர.அன்பரசன் தலைமையில் நடைபெற் றது
மாதம்ஒருமுறை தெருமுனைப் பிரச்சாரம் நடத்துவது, தந்தை பெரியா ரின் பிறந்தநாளை மிக சிறப்பாக கொண்டா டுவது, விடுதலை சந்தா சேகரிப்பு பணியினை தொடர்ந்து செய்வது, குடியாத்தம் பெரியார் அரங்கில் அக்டோபர் மாதம் பயிற்சி வகுப்பு நடத்துவது, வாய்ப்பிருக் கும் இடங்களில் தொடர்ந்து கழக கொடி ஏற்றுவது என தீர்மா னங் கள் நிறைவேற்றப்பட்டன.
கழக காப்பாளர் வி.சடகோபன், பொதுக்குழு உறுப்பினர் வி.இ. சிவக் குமார், குடியாத்தம் நகர தலைவர் சி.சாந்தக்குமார், குடியாத்தம் நகர அமைப் பாளர் வி.மோகன், மாண வர் கழகம் வி.சி.சங்கநிதி ஆகியோர் கலந்துக் கொண்டனர்.
No comments:
Post a Comment