தந்தை பெரியார் - அறிஞர் அண்ணா பிறந்த நாளை சிறப்பாகக் கொண்டாட தீர்மானம்
ஆவடி,ஆக.31- ஆவடி மாவட்ட திராவிடர் கழகத்தின் மாதாந்திர கலந்துரையாடல் கூட்டம் 27.8.2023 ஞாயிற்றுக்கிழமை மாலை 05-30 மணிக்கு மாவட்ட தலைவர் வெ.கார்வேந்தன் தலைமையில் திருநின்றவூர் நகர கழக இளைஞ ரணி செயலாளர் சிலம்பரசன் கடவுள் மறுப்பு கூற, மாவட்ட செயலாளர் க.இளவரசன் ஒருங் கிணைப்புடன் துவங்கியது.
முதலில் ஆவடி மாவட்ட கழக துணை தலைவர் வை.கலையரச னின் தந்தையார் பெ.வைத்திய லிங்கம் மறைவிற்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.
சிறப்பு அழைப்பாளராக மாநில கழக அமைப்பாளர் வி.பன்னீர் செல்வம் கலந்து கொண்டு கழக வளர்ச்சி குறித்தும் அறிவுஆசான் தந்தை பெரியார் பிறந்த நாள் விழா மற்றும் பெரியாரியல் பயிற் சிப் பட்டறை சிறப்பாக நடத்துவது குறித்து வழிகாட்டியுரையாற் றினார். பின்னர் ஆவடி மாவட்ட துணைத் தலைவர் மு.ரகுபதி, திராவிட தொழிலாளர் கழக ஆவடி மாவட்ட தலைவர் ஏழுமலை, ஆவடி மாவட்ட மகளிரணி தலை வர் பூவை செல்வி, இளைஞரணி செயலாளர் ஏ.கண்ணன், ஆவடி நகர தலைவர் முருகன், செயலாளர் தமிழ்மணி, துணைத் தலைவர் சி.வச்சிரவேலு, பூந்தமல்லி நகர செயலாளர் மணிமாறன், பூந்த மல்லி ஒன்றிய செயலாளர் வெங்க டேசன், பட்டாபிராம் பகுதி தலை வர் இரா.வேல்முருகன், திருமுல் லைவாயில் பகுதி கழக தலைவர் இரணியன் (எ) அருள்தாஸ், அம்பத்தூர் பகுதி கழக தலைவர் பூ.இராமலிங்கம், பகுத்தறிவாளர் கழக துணைத் தலைவர் ஜெயரா மன், துணைச் செயலாளர் சுந்தர் ராஜன், பெரியார் பெருந் தொண்டர் அம்பத்தூர் அ.வெ.நடராசன், பூந்தமல்லி பாலசந்தர், பட்டாபிராம் அறிவுமணி ஆகி யோரின் ஆக்கப்பூர்வமான உரைக ளுக்குப் பின் கீழ்க்கண்ட தீர்மா னங்கள் நிறைவேற்றப்பட்டன.
செப்டம்பர் 15ஆம் தேதியன்று அறிஞர் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு மாவட்ட கழகம் சார் பில் அந்தந்த பகுதிகளில் உள்ள சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துவது செப்டம் பர் 17ஆம் தேதியன்று தந்தை பெரியார் பிறந்த நாளை முன் னிட்டு வேப்பம்பட்டு- பட்டாபி ராம் பகுதிகளில் உள்ள பெரியார் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துவது மற்றும் கழகக் கொடிகளை ஏற்றுவது, இறுதியில் ஆவடியில் புதுப்பிக்கப் பட்டுள்ள பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தியபின், பெரியார் திடலில் நடைபெறும் பெரியார் பிறந்த நாள் விழாவில் திரளாக கலந்து கொள்வது செப்டம்பர் 24ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று காலை முதல் மாவட்டத்திற்குட் பட்ட அம்பத்தூர், திருமுல்லைவா யில், பட்டரவாக்கம், கொரட்டூர், முகப்பேர், மதுரவாயல், குமணன் சாவடி, பூந்தமல்லி ஆகிய பகுதிகளில் பெரியார் பட ஊர்வல மாக சென்று கழகக் கொடிகளை ஏற்றுவது செப்டம்பர் 30ஆம் தேதியன்று நடைபெறும் பெரியா ரியல் பயிற்சிப் பட்டறை நிகழ்வை சிறப்பாக நடத்துவது மற்றும் அக்டோபர் மாதம் தஞ்சையில் கழகம் சார்பில் நடைபெறும் கலைஞர் நூற்றாண்டு விழாவில் திரளாக கலந்து கொள்வது ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன.
இறுதியில் ஆவடி மாவட்ட கழக துணை செயலாளர் பூவை தமிழ்ச்செல்வன் நன்றி கூற கூட்டம் முடிவுற்றது.
No comments:
Post a Comment