மழை வாய்ப்பு
தமிழ்நாட்டில் காவிரி பாசனம் பகுதி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இன்றும், நாளையும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மய்யம் தகவல்.
நீர் வரத்து
மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு நீர் திறப்பு நேற்று முதல் விநாடிக்கு 10 ஆயிரம் கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
தீர்மானம்
‘நீட்’ விலக்கு மசோதாவுக்கு ஒப்புதல் தராமல் இளை ஞர்களின் மருத்துவ கனவை சிதைத்து தற்கொலைக்குத் தூண்டும் தமிழ்நாடு ஆளுநரை திரும்பப் பெற வேண்டும் என்று விவசாயிகள் தொழிலாளர் கட்சி தீர் மானம் நிறைவேற்றியுள்ளது.
இலவசக் கல்வி
இலவச கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் விவரங் களை சரிபார்க்க ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசின் பள்ளிக் கல்வித்துறை தெரிவித்து உள்ளது.
விரைவு சாலை
சென்னை - பெங்களூரு இடையே 262 கி.மீ., தூரம் கொண்ட பசுமை வழி விரைவுச் சாலை அமைக்கும் பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. இந்தப் பணிகள் முடிவடைந்தால், சென்னையில் இருந்து 3 மணி நேரத்தில பெங்களூருவை அடையலாம் என்று நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் தகவல்.
நிறைவு
கலைஞர் உரிமைத் தொகை திட்டத்துக்கு விண்ணப்பப் பதிவுக்கான சிறப்பு முகாம் நிறைவடைந்தது. கூடுதலாக கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வெங்காயம்
விலை உயர்வை கட்டுப்படுத்தும் முயற்சியாக, வெங்காய கையிருப்பை 3 லட்சம் டன்னில் இருந்து 5 லட்சம் டன்னாக அதிகரிக்க ஒன்றிய அரசு முடிவு செய்துள்ளது. மேலும் இன்று முதல் கிலோ ரூ.25க்கு வெங்காய விற்பனை தொடங்கப்படவுள்ளது.
நொறுங்கியது
இந்தியாவுக்குப் போட்டியாக நிலவின் தென் துருவத்தில் தரையிறங்க, திட்டமிடப்பட்டிருந்த ரஷ்யா வின் "லூனா-25" விண்கலம் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக நிலவின் மேற்பரப்பில் விழுந்து நொறுங் கியது.
No comments:
Post a Comment