"மகாராட்டிரா மூடநம்பிக்கை ஒழிப்புக் குழு" (மகாராட்டிரா அந்தஷ்ரத்தா நிர்மூலன் சமிதி) அமைப்பின் தலைவர் டாக்டர் நரேந்திர தபோல்கர் அவர் களின் நினைவு நாள் ஆகஸ்ட் 20 ஆம் தேதி வருகிறது. இதனையொட்டி 20 முதல் 31 ஆம் தேதி வரை "அறிவியல் மனப்பான்மையை வளர்ப்போம்" எனும் தலைப்பில் தமிழ்நாடு முழுவதும் நிகழ்ச்சிகள் நடத்த வேண்டும் எனத் திராவிடர் கழகத் தலைவர், ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிவித்தார்கள்.
அந்த வகையில் பகுத்தறிவாளர் கழகம் மற்றும் பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம் சார்பில் தமிழ்நாடு முழுக்க 51 இடங்களில் இந்நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. இவ்வகையில் மும்பை மாநிலப் பகுத்தறிவாளர் கழகம் சார்பிலும் ஆகஸ்ட் 20 ஆம் தேதி கருத்தரங்கம் நடைபெற இருக்கிறது!
இதனையொட்டி தபோல்கர் அவர் களின் மகனும், மகாராட்டிரா மூடநம் பிக்கை ஒழிப்புக் குழுவின் இன்றைய தலைவருமான டாக்டர் ஹமீத் தபோல் கரை, மும்பை மாநிலப் பகுத்தறிவாளர் கழகத் தலைவர் அ.இரவிச்சந்திரன் தொடர்பு கொண்டு பேசினார்.
இந்நிலையில் ஆசிரியர் கி.வீரமணி அவர்களுடன் டாக்டர் ஹமீத் தபோல் கர் (தபோல்கரின் மகன்) பேசினார்.
''எனது தந்தையார் தபோல்கர் நினைவு நாளில் தமிழ்நாடு முழுவதும் நிகழ்ச்சிகள் நடைபெறுவது மகிழ்ச்சி யாகவும், வியப்பாகவும் இருக்கிறது. இந்திய அளவில் கூட இப்படியான ஏற்பாடுகள் ஏதுமில்லை. அதுவும் 10 நாள்கள் தொடர்ந்து நடத்துவதற்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள் கிறேன்! பகுத்தறிவாளர் கழகம் சார்பில் மும்பையில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்க முயற்சிக்கிறேன்", என ஆசிரியர் கி.வீரமணி அவர்களிடம் டாக்டர் ஹமீத் தபோல்கர் தெரிவித்தார்!
No comments:
Post a Comment