ஊழல் இல்லாத ஆட்சி என்று ஓலமிட்ட ஒன்றிய பிஜேபி அரசின் முகமூடி கிழிந்தது உள்துறை அமைச்சக ஊழியர்களுக்கு எதிராக அதிக ஊழல் புகார்கள்: கண்காணிப்பு ஆணையம் தகவல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, August 21, 2023

ஊழல் இல்லாத ஆட்சி என்று ஓலமிட்ட ஒன்றிய பிஜேபி அரசின் முகமூடி கிழிந்தது உள்துறை அமைச்சக ஊழியர்களுக்கு எதிராக அதிக ஊழல் புகார்கள்: கண்காணிப்பு ஆணையம் தகவல்

புதுடில்லி, ஆக. 21- ஒன்றிய உள்துறை அமைச்சக ஊழியர்களுக்கு எதிராக அதிகமான ஊழல் புகார் கள் பெறப்பட்டதாக ஒன் றிய ஊழல் கண்காணிப்பு ஆணையம் தெரிவித்துள் ளது.

ஒன்றிய ஊழல் கண் காணிப்பு ஆணையம் வெளியிட்டுள்ள ஆண்டு அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:- கடந்த ஆண்டு, ஒன்றிய அரசின் அனைத்து துறைகள், அமைப்புகள் ஆகியவற்றை சேர்ந்த அதிகாரிகள், ஊழியர்கள் ஆகியோ ருக்கு எதிராக 1 லட்சத்து 15 ஆயிரத்து 203 ஊழல் புகார்கள் பெறப்பட்டன. அவற்றில், 85 ஆயிரத்து 437 புகார்கள் முடித்து வைக்கப்பட்டன. 29 ஆயிரத்து 766 புகார்கள் நிலுவையில் உள்ளன. அதிலும், 22 ஆயிரத்துக்கு மேற்பட்ட புகார்கள், 3 மாதங்களுக்கு மேலாக நிலுவையில் உள்ளன. அதிகபட்சமாக, ஒன்றிய உள்துறை அமைச்சக அதிகாரிகள், ஊழியர் களுக்கு எதிராக 46 ஆயி ரத்து 643 ஊழல் புகார் கள் வந்துள்ளன. அவற் றில் 23 ஆயிரத்து 919 புகார்கள் முடித்து வைக் கப்பட்டுள்ளன.

ரயில்வே ஊழியர்க ளுக்கு எதிராக 10 ஆயி ரத்து 580 ஊழல் புகார் கள் வந்துள்ளன. வங்கி ஊழியர்களுக்கு எதிராக 8 ஆயிரத்து 129 புகார்கள் பெறப்பட்டுள்ளன. தலைநகர் டில்லியில் உள்ள முக்கிய அமைச்சர கத்தின் அரசு ஊழியர்க ளுக்கு எதிராக 7 ஆயி ரத்து 370 ஊழல் புகார் களும், ஒன்றிய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சக ஊழியர்களுக்கு எதிராக 4 ஆயிரத்து 710 புகார் களும், நிலக்கரி அமைச் சக ஊழியர்களுக்கு எதி ராக 4 ஆயிரத்து 304 ஊழல் புகார்களும், பெட்ரோலிய அமைச்சக ஊழியர்களுக்கு எதிராக 2 ஆயிரத்து 617 புகார் களும், மத்திய நேரடி வரி கள் வாரிய ஊழியர்க ளுக்கு எதிராக 2 ஆயி ரத்து 150 ஊழல் புகார் களும் பெறப்பட்டுள்ளன. ராணுவ அமைச்சக ஊழி யர்கள் மீது 1,619 ஊழல் புகார்களும், தொலைத் தொடர்புத் துறை ஊழியர்கள் மீது 1,308 ஊழல் புகார்களும், நிதி அமைச்சக ஊழியர்கள் மீது 1,202 ஊழல் புகார் களும், காப்பீட்டு நிறு வன ஊழியர்கள் மீது 987 ஊழல் புகார்களும், பணி யாளர் நலத்துறை அமைச் சக ஊழியர்கள் மீது 970 புகார்களும், உருக்கு அமைச்சக ஊழியர்கள் மீது 923 புகார்களும் வந்துள்ளன. 

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment