மதுரை, ஆக.13 - நீட் தேர்வுக்கு எதிராக போராடியவருக்கு காவல் துறை வேலையை நிராகரித்தது சரியல்ல என்றும், பொதுவான காரணத்திற்காக போராட ஒவ் வொரு குடிமகனுக்கும் உரிமை உண்டு எனவும் மதுரை உயர்நீதி மன்றம் உத்தரவிட்டது.
தென்காசி மாவட்டத்தை சேர்ந்த அருண்காந்த், மதுரை உயர்நீதிமன் றத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-
பி.காம் பட்டப்படிப்பை 2018ஆ-ம் ஆண்டில் முடித்தேன். கடந்த ஆண்டு காவல்துறையில் 2ஆ-ம் நிலை காவலர் பணிக்கு விண்ணப்பித்தேன். எழுத்துத் தேர்வில் 75-க்கு 65 மதிப்பெண்ணும், உடல் தகுதித்தேர்வில் 24-க்கு 24 மதிப்பெண்ணும் பெற்றேன். இதற் கிடையே என் மீது கிரிமினல் வழக்கு நிலுவையில் இருப்பதாக கூறி, என்னை காவலர் பணிக்கு தேர்வு செய்வதில் இருந்து நிரா கரித்து உத்தரவிட்டனர். இதை ரத்து செய்து எனக்கு காவல் துறையில் வேலை வழங்க உத்தர விட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி விக்டோ ரியா கவுரி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் வழக் குரைஞர் ஆர்.கருணாநிதி ஆஜராகி, மனுதாரர் கல்லூரி மாணவராக இருந்தபோது 2017ஆ-ம் ஆண்டில் நீட் தேர்வுக்கு எதிராக நடந்த ஆர்ப்பாட்டத்தில் சக மாணவர்க ளுடன் பங்கேற்று உள்ளார்.
அதுகுறித்து சிறீவில்லிபுத்தூர் காவல்துறையில் வழக்குப்பதிவு செய் தனர். இதை காரணமாக வைத்து மனு தாரருக்கு காவலர் வேலை மறுக்கப் பட்டு உள்ளது, என்றார்.
பின்னர் கூடுதல் அட்வகேட் ஜெனரல் வீராகதிரவன் ஆஜராகி, மனுதாரர் மீதான வழக்கு ரத்து செய் யப்பட்டாலும் கூட, அவருடைய தகு தியை பரிசீலிக்கும் உரிமை அதிகாரி களுக்கு உள்ளது. அவருக்கு வேலை வழங்க கட்டாயப்படுத்த முடியாது என்றார்.
விசாரணை முடிவில் நீதிபதி பிறப் பித்த உத்தரவு வருமாறு:-
ஒருவர் மீதான வழக்கில் அவர் விடு விக்கப்பட்டாலோ அல்லது வழக்கு ரத்து செய்யப்பட்டுவிட் டால், அந்த உத்தரவை அவருக்கு ஆதரவானதாக கருதி, வேலை வழங்க பரிசீலிக்கலாம் என மதுரை உயர்நீதிமன்ற டிவிஷன் பெஞ்ச் ஏற்கெனவே உத்தரவிட்டுள் ளது.
மனுதாரர் சக மாணவர்களுடன் நீட் தேர்வுக்கு எதிரான போராட் டத்தில் பங்கேற்றுள்ளார். பல மாண வர்கள் மீதும் வழக்குப்பதிவு செய்யப் பட்டு உள்ளது. அதில் ஒருவர் அந்த வழக்கை ரத்து செய்யக்கோரி உயர்நீதி மன்றத்தில் மனுவை தாக்கல் செய்திருக் கிறார். அதை தனி நீதிபதி விசாரித்து, சிறீவில்லிபுத்தூர் காவல்துறையினர் பதிவு செய்த வழக்கை ரத்து செய்தது மட்டுமல்லாமல், மனுதாரருடன் போராடிய அனைவரும் விடுவிக்கப் படுவதாக 2022ஆம் ஆண்டில் உத்தர விட்டார். இது அருண்காந்துக்கும் பொருந்தும்.
பொதுவான காரணத்திற்காக போராடுவதற்கு நாட்டின் ஒவ் வொரு குடிமகனுக்கும் உரிமை உண்டு. இதை கருத்தில் கொள்ளாமல் மனுதாரரை காவல்துறையின் பணிக்கு பரிசீலிப்ப தில் இருந்து நிராகரித்தது சரியல்ல. அந்த உத்தரவு ரத்து செய்யப் படுகிறது. மனுதாரருக்கு 2ஆ-ம் நிலை காவலர் பணி நியமன ஆணையை வழங்கி, பயிற்சிக்கும் அனுப்பி வைக்க வேண் டும். 12 வாரத்திற்குள் இந்த நடவடிக் கையை எடுக்க வேண்டும். இவ் வாறு உத்தரவி கூறியிருந்தார்.
No comments:
Post a Comment