இனமானக் கவிஞர் என்று நம்மால் அன்போடு அழைக்கப் பட்டவரும், மாறாத கொள்கை வீரருமான செ.வை.ர. சிகாமணி (வயது 83) அவர்கள் கடந்த 07.08.2023 அன்று ஆஸ்திரேலியாவில் தன் மகன் இல்லத்தில் உடல்நல மின்மை காரண மாகக் காலமானார் என்ற செய்தி தாமதமாக நம்மை யடைந்தாலும், பேரதிர்ச்சியைத் தருவதாக அமைந்தது.
திராவிடர் கழகத்தின் கலைத் துறைச் செயலாளர், தகவல் தொடர்புச் செய லாளர், பெரியார் பகுத்தறிவு இலக் கிய அணியின் மாநிலத் தலைவர், புதுமை இலக்கியத் தென்றல் தலைவர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளில் திறம்பட கடமையாற்றியவர்.
இன உணர்வும், பகுத்தறிவுச் சிந்தனையும் நிரம்பிய நெருப்புப் பொறிகளாக அவரது கவிதைகள் நமது ஏடுகளுக்கு அணி சேர்த்துள்ளன. கழகப் பொதுக் கூட்டங்களிலும், மாநாடுகளில் எழுச்சி நிறைந்த உரை களைத் தந்த சீரிய சொற்பொழிவாளர், எழுத்தாளர். உணர்வுப்பூர்வமாக நம்மை நேசித்த கொள்கைத் தோழமையாளர். அவரது மறைவு நமக்குப் பேரிழப்பாகும். அவரது வாழ்விணையர், மகன்கள், மகள் மற்றும் குடும்பத் தினருக்கும், பல நாடுகளிலும் உள்ள அவரது நண்பர்கள், தோழர்களுக்கும் நமது ஆறுதலை தெரிவித்து கொள்கிறோம்.
சென்னை
12.8.2023
No comments:
Post a Comment