விசாரணை அமைப்புகளுடன் பா.ஜ.க. அரசு ரகசியக் கூட்டணி மக்களவையில் தயாநிதி மாறன் குற்றச்சாட்டு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, August 7, 2023

விசாரணை அமைப்புகளுடன் பா.ஜ.க. அரசு ரகசியக் கூட்டணி மக்களவையில் தயாநிதி மாறன் குற்றச்சாட்டு

புதுடில்லி, ஆக. 7- டில்லி அரசு அதிகாரிகள் நியமனம் தொடர்பான மசோதாவை மக்களவை உள்துறை அமைச்சர் அமித்ஷா அறிமுகப்படுத்தினார். மக்களவையில் 9 நாட்க ளுக்கு பின் இயல்பு நிலை திரும்பிய நிலையில் மசோதாக்கள் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. டில்லி அரசு அதிகாரிகள் நியமன சட் டம் தொடர்பாக மக்கள வையில் காரசார விவாதம் நடைபெற்று வருகிறது.

டில்லி அரசில் அதி காரிகள் நியமனத்தில் துணை நிலை ஆளுநருக்கு அதிகாரம் வழங்கும் மசோதா மீதான விவா தம் மக்களவையில் நடந்து வரும் நிலையில், இம் மசோதாவுக்கு திமுக கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. 

அப்போது, பேசிய திமுக மக்களவை உறுப்பி னர் தயாநிதி மாறன், இம் மசோதா உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கு எதிரானது என்றும் எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் ஆளுநர்களை பாஜக அரசு தவறாக பயன்படுத் துகிறது எனவும் விசா ரணை அமைப்புகளுடன் பாஜக அரசு ரகசிய கூட் டணி அமைத்துச் செயல் படுகிறது என்றும் "இந் தியா" கூட்டணி ஆட்சி அமைந்த பிறகு விசாரணை அமைப்புகள், தற் போது போன்று தவறாக பயன்படுத்தப்பட மாட் டாது என்றும் கூறினார்.

2024இல் நீங்கள் எதிர்க்கட்சி, நாங்கள் ஆளும் கட்சியாக இருப் போம். மணிப்பூர் விவகா ரம் குறித்து பேசும்போது, பிரதமர் அவையில் இருக்க வேண்டும் என் பதே எங்களது கோரிக்கை. மேலும் உலகமே ஒரு குடும்பம் என்று பிரதமர் மோடி கூறுகிறார். ஆனால், தனது குடும்பத்தில் ஒரு பகுதியான மணிப்பூர் பற்றி எரியும்போது அதைப் பற்றி ஏன் பேசாமல் இருக்கிறார் என கேள்வி எழுப்பிய தயாநிதி மாறன், ஊழல் குற்றச்சாட்டில் சிக்கினா லும் பாஜகவில் சேர்ந் தால் அவர்கள் குற்றமற்ற வர்களாக மாறிவிடுவது எப்படி? எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் ஆளுநர்களை பாஜக அரசு தவறாக பயன்படுத் துகிறது. தமிழ்நாட்டில் ஆளுநர் ரவி, மசோதாக் களை கிடப்பிலேயே வைத் துள்ளார் என கூறினார். 

தயாநிதிமாறன் பேச் சுக்கு பாஜக நாடாளு மன்ற உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தபோது "உண்மை சுடத்தான்" செய்யும் என்று காரசார மாக பதில் அளித்தார். டில்லி நிர்வாக சிறப்பு மசோதா குறித்த விவா தத்தில் மத்திய சென்னை மக்களவை உறுப்பினர் தயாநிதி மாறன் பேசிக் கொண்டிருக்கும்போது மக்களவைத் துணைத் தலைவர் ராஜேந்திர அகர்வால் நேரம் முடிந்து விட்டது எனக் கூறி அவர் பேச அனுமதி மறுத்த நிலையில், திமுக நாடாளுமன்ற உறுப் பினர்கள் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். தமிழ்நாட்டில் ஆளுநர் ஆர்.என்.ரவி மசோதாக்களை கிடப் பில் போட்டுள்ளதாக குற்றம் சாட்டி கொண்டிருந்தபோது இடை நிறுத்தி நேரம் முடிந்து விட்டதாக கூறினார் மக் களவைத் துணைத் தலை வர்.

No comments:

Post a Comment