பிஜேபி எச்.ராஜாவுக்கு எதிரான வழக்குகளை ரத்து செய்ய உயர்நீதிமன்றம் மறுப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, August 30, 2023

பிஜேபி எச்.ராஜாவுக்கு எதிரான வழக்குகளை ரத்து செய்ய உயர்நீதிமன்றம் மறுப்பு

சென்னை,ஆக.30 - பெரியார் சிலை உடைப்பு, திமுக மக்களவை உறுப்பினர் கனிமொழி மீது விமர்சனம் உள்பட பா.ஜ.க. மேனாள் தேசிய செயலாளர் எச்.ராஜாவுக்கு எதிராக பதிவு செய்யப்பட்டுள்ள 7 வழக்குகளை ரத்து செய்ய உயர்நீதிமன்றம் மறுத்து விட்டது.

தமிழ்நாடு முழுவதும் பல்வேறு காவல் நிலையங்களில் பதிவான 11 வழக்குகளை ரத்து செய்யக் கோரி பா.ஜ.க. மேனாள் தேசிய செயலா ளர் ஹெச்.ராஜா உயர்நீதிமன் றத்தில் மனுக்கள் தாக்கல் செய் திருந்தார். இந்த வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, எச்.ராஜா தரப்பில் ஆஜரான வழக்குரைஞர் ஆர்.சி.பால்கனராஜ் ஆஜரானார். அதற்கு அரசு தரப் பில் வழக்குரைஞர் பாபு முத்து மீரான் ஆஜரானார்.

வழக்கை விசாரித்த நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ், அற நிலையத் துறை அதிகாரிகளின் குடும்பத்தினருக்கு எதிராக அவ தூறு கருத்து தெரிவித்தது தொடர் பாக, சிவகாஞ்சி, கரூர், ஊட்டி, திருவாரூர் ஆகிய காவல் நிலையங் களில் பதிவு செய்யப்பட்ட வழக் குகள், முதல் தகவல் அறிக்கை கட்டத்திலேயே இருப்பதால் அந்த 4 வழக்குகள் ரத்து செய்யப்படுகிறது. அதேசமயம், இதே விவகாரத்தில் விருதுநகர், இருக்கன்குடி, ஈரோடு ஆகிய காவல் நிலையங்களில் பதி வான வழக்குகளில் நீதிமன்றங் களில் குற்றப்பத்திரிகை தாக்கலாகி விட்டது. எனவே,இந்த 3 வழக்கு களை ரத்து செய்ய முடியாது. ஈரோடு நீதிமன்றத்தில் உள்ள வழக்கை சிறீவில்லிப்புத்தூர் சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப் படுகிறது.

பெரியார் சிலை உடைப்பு தொடர்பாக ஈரோடு காவல் நிலை யத்தில் பதிவாகி, அங்குள்ள நீதி மன்றத்தில் நிலுவையில் உள்ள 3 வழக்குகளை ரத்து செய்யக்கோரிய மனுக்கள் தள்ளுபடி செய்யப்படு கின்றன. அவை சென்னை சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்படுகிறது. கனிமொழியை விமர்சித்தது தொடர்பாக ஈரோட்டில் பதிவு செய்யப்பட்ட ஒரு வழக்கு சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்படுகிறது. அந்தந்த விசாரணை நீதிமன்றங்கள் 3 மாதத்தில் வழக்கைமுடிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.

No comments:

Post a Comment