கவனத்திற்குரிய முக்கிய செய்திகள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, August 19, 2023

கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்

19.8.2023

டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:

👉மீனவர்கள் மீது இலங்கை ராணுவம் தாக்குதல். மோடி அரசின் பலவீனம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு.

👉அமேதி தொகுதியில் ராகுல், வாரணாசியில் பிரி யங்கா, தேர்தலில் போட்டியிட காங்கிரஸ் ஆலோசனை.

டெக்கான் கிரானிக்கல்,சென்னை:

👉மீனவர் பிரச்சினைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க கச்சத்தீவை மீட்பதே நிரந்தர தீர்வு: நாடாளுமன்ற தேர்தலுக்கு பிறகு அமையும் புதிய அரசு அதை நிறைவேற்றும்; ராமேஸ்வரம் மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி

👉 ஜனநாயகத்துக்கு எதிரான சங்கி மாடல் ஆட்சியை மோடி அரசு நடத்துகிறது, கெஜ்ரிவால் குற்றச்சாட்டு.

இந்தியன் எக்ஸ்பிரஸ்:

👉 தேர்தல் ஆணையர்களை கட்டுப்படுத்தும் முயற்சியின் மூலம் பாஜக அரசு ஜனநாயகத்தை குழிதோண்டிப் புதைக்கிறது என்கிறார் ஆம் ஆத்மி செய்தி தொடர்பாளர் ரீனா குப்தா.

நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:

👉 பீகார் கணக்கெடுப்புக்கு ஜாதி விவரங்களை ஒருவர் அளித்தால் என்ன பாதிப்பு? என உச்சநீதிமன்றம் கேள்வி

தி டெலிகிராப்:

👉 பாஜ ஆட்சியில் 40% கமிஷன் குற்றச்சாட்டு - ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணைக்கு குழு

👉புதிய அரசியல் சட்டம் எழுதப்பட வேண்டும் என தேசிய பொருளாதார ஆலோசனைக் குழு தலைவர் பிபேக் டெப்ராய் பேசியது அவரது சொந்த கருத்து என தேசிய பொருளாதார கவுன்சில் டுவிட்டரில் பதிவு.

டைம்ஸ் ஆப் இந்தியா:

👉அமர்நாத் யாத்திரை முடிவடைவதற்கு முன்பே, அதிகரித்த வெப்பநிலை காரணமாக குகைக் கோயிலில் இயற்கையாக உருவான பனி சிவலிங்கம் முற்றிலும் உருகியது.

அனைத்து கல்லூரிகளிலும் தமிழ்நாடு மாணவர் மன்றம் தொடங்க திமுக முடிவு.

- குடந்தை கருணா


No comments:

Post a Comment