பள்ளிக் கல்வியில் ஆண்டுக்கு இருமுறை பொதுத் தேர்வு ஆபத்தானது இரா.முத்தரசன் எச்சரிக்கை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, August 27, 2023

பள்ளிக் கல்வியில் ஆண்டுக்கு இருமுறை பொதுத் தேர்வு ஆபத்தானது இரா.முத்தரசன் எச்சரிக்கை

சென்னை,ஆக.27- இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி தமிழ்நாடு மாநில செயலாளர் இரா.முத்தரசன் விடுத்துள்ள அறிக்கை வருமாறு,

ஒன்றிய அரசின் தேசியக் கல்விக் கொள்கை 2020 வழக் கொழிந்து போக வேண்டிய வருணாசிரம, சனாதான கருத் தியலின் நவீன வடிவமைப்பு என்பதால் நாடு முழுவதும் கடு மையான எதிர்ப்பு தெரிவிக்கப் பட்டது.

இதனைத் தொடர்ந்து அதனை நிறுத்தி வைத்து, அது தொடர்பான வல்லுநர் குழு அமைக்கப்பட்டது. இப்போது அந்த வல்லுநர் குழு நீண்ட சில நூறு பக்கங்கள் கொண்ட அறிக் கையை பரிந்துரைகளுடன் வெளியிட்டுள்ளது.

இதில் பள்ளிக் கல்வி நிலை யில் ஆண்டுக்கு இரு பொதுத் தேர்வு என்ற புதிய  தேர்வு முறை அறிவிக்கப்பட்டுள்ளது. இரு முறை தேர்வில் எந்தத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றுள் ளதை மாணவர்கள் அடுத்த நிலைக்குச்செல்ல பயன்படுத்திக் கொள்ளலாம் என்று கூறப் பட்டுள்ளது.

இதில்  மாணவர்களுக்கு வாய்ப்பு வழங்குவதாக தெரிவித்திருந்தாலும், உண்மையில் பிற்படுத்தப்பட்ட மிகவும் பிற் படுத்தப்பட்டு, தாழ்த்தப்பட் டோர் பழங்குடி மாணவர்களை வடிகட்டி வெளியேற்றும்  நோக்கம் கொண்டதாகும்.

ஏற்கனவே தமிழ்நாட்டின் கோரிக்கையை நிராகரித்து  நடைமுறைப்படுத்தி வரும் “நீட்” தேர்வு காரணமாக  ஆயிரக்கணக் கில் பயிற்சி மய்யங்கள் உருவாகி, பணம் பறிக்கும் கும்பல் கலாச் சாரம் வளர்ந்து வருகிறது. 

அதன் எதிர் விளைவாக  அடித்தட்டு மக்களின் குழந்தை களும். தேர்வு முறையால் அச்சப் பட்டு பதற்றமடையும் குழந்தை களும்  தற்கொலை சாவுக்கு நெட்டித் தள்ளப்பட்டு வரு வதை தமிழ்நாடு கண்டு வருகிறது.

இந்த நிலையில் பாஜக ஒன்றிய அரசு பள்ளிக் கல்வியில் ஆண்டுக்கு இருமுறை பொதுத் தேர்வு என்று அறிவித்திருப்பது, கல்வித் துறையில் தொடர்ந்து நடத்தும் தாக்குதலாகும். இதில் அண்மையில் ஒன்றிய உள்துறை அமைச்சர் திரு அமித்ஷா “பிற மொழிகளை (மாநில மொழி - தமிழ் நாட்டில் தமிழ்) தாய் மொழியாக கொண்டவர்கள் ஹிந்தி மொழியை எதிர்ப்பின்றி ஏற்க வேண்டும் என்று அகங் காரத்துடன் பேசிய பேச்சுக்கு செயல் வடிவம் தரும் முயற்சி யாகும்.

அரசின் வஞ்சகத் திட்டத்தை இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையாகக் கண்டிக்கிறது. ஆண்டுக்கு இருமுறை பொதுத் தேர்வு அறிவிப்பை திருப்பப் பெற வேண்டும் என வலியுறுத்து கிறது.

-இவ்வாறு இரா.முத்தரசன் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment