நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் மறுதேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, August 12, 2023

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் மறுதேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைப்பு

புதுடில்லி,ஆக.12 - நாடாளுமன்ற மழைக் கால கூட்டத்தொடர் மறுதேதி குறிப்பிடப் படாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் கடந்த மாதம் (ஜூலை) 20ம் தேதி தொடங்கியது. நாடாளு மன்ற மக்களவையில் அரசுக்கு எதிராக எதிர்க் கட்சியினர் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தனர். அதன் மீதான விவாதம் கடந்த 8-ஆம் தேதி தொடங்கி நடந்த நிலையில், நேற்று (11.08.2023) கூட்டத் தொடர் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டது.

இதுதொடர்பாக ஒன்றிய அரசு விடுத்துள்ள செய்திக்குறிப்பில், "இந்த கூட்டத்தொடர் 23 நாட்கள் 17 அமர்வுகளை கொண்டதாக அமைந்தது.

இந்த கூட்டத் தொட ரில் மக்களவையில் 15 மசோதாக்களும், மாநி லங்களவையில் 5 மசோ தாக்களும் தாக்கல் செய்யப்பட்டன. மக்களவையில் 20 மசோதாக்களும், மாநிலங்களவையில் 23 மசோதாக்களும் நிறை வேற்றப்பட்டன. 

மக்களவை மற்றும் மாநிலங் களவையின் அனுமதியுடன் தலா ஒரு மசோதா திரும்பப் பெறப்பட்டது. கூட்டத்தொடரின் போது நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்ட மொத்த மசோதாக்களின் எண்ணிக்கை 21 ஆகும்.

மழைக்காலக் கூட்டத் தொடருக்கு முன்னர் குடியரசுத் தலைவரால் பிறப்பிக்கப்பட்ட டில்லி அவசரச் சட்டம் 2023-க்கு மாற்றாக, மசோதா இரு அவைகளால் பரிசீலிக் கப்பட்டு நிறைவேற்றப் பட்டது.

மக்களவையில் கவுரவ் கோகாய் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்து சுமார் 20 மணி நேரம் விவா திக்கப்பட்டது. 7 அமைச் சர்கள் உட்பட 58 உறுப் பினர்கள் இந்த விவா தத்தில் கலந்து கொண் டனர். இதற்கு பிரதமர் மோடி பதிலளித்தார். அதன் பின்னர் இந்த தீர்மானம் குரல் வாக் கெடுப்பு மூலம் அவையில் நிராகரிக்கப்பட்டது.

இந்தக் கூட்டத் தொடரில் மக்களவை யின் செயல்பாட்டுத் திறன் உத்தேசமாக 44 சதவீதமாகவும், மாநி லங்களவையின் செயல் பாட்டுத்திறன் தோராய மாக 63 சதவீதமாகவும் இருந்தது." இவ்வாறு தெரிவிக் கப்பட்டுள்ளது.


No comments:

Post a Comment