சென்னை, ஆக.6 - சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத வகையில் தற்போது மின்சார வாகனங்களின் பயன்பாடு அதிகரித்து வரும் நிலையில், கோவையை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் மின்சார மோட்டார் சைக்கிள்கள் தயாரிப்பு நிறுவனமான பாரத் நியூ-எனர்ஜி நிறுவன் (ஙிழிசி), தனது தனித்தன்மை வாய்ந்த விற்பனை மற்றும் சேவை மய்யத்தை சென்னை போரூரில் ‘கிராண்ட் மோஸ்’ என்ற பெயரில் திறந்துள்ளது.
இளம் தலைமுறையினரை கவரும் வகையில் புத்தாக்கமிக்க, சிறந்த செயல்திறன் மற்றும் நீடித்து உழைக்கும் திறன், சிறந்த வடிவமைப்பு மற்றும் நகர்ப்புற மக்களை வெகுவாகக் கவரும் வகையில் பிஎன்சி சேலஞ்சர் எஸ்110 என்ற மோட்டார் சைக்கிளை அறிமுகம் செய்துள்ளோம். இதற்கான மூலப் பொருள்கள் தயாரித்து வழங்குவோர் தமிழ்நாட்டிலேயே உள்ளனர் என இந்நிறுவன தலைம செயல் அதிகாரி அனிருத் ரவி தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment