நியூயார்க், ஆக.13 - கடந்த ஓராண்டு காலமாக கட்டுக்குள் இருந்த கரோனா வைரஸ் மீண்டும் வேகமாக பரவி வருகிறது. கடந்த 2019 இறுதியில் பரவத் தொடங்கிய கரோனா வைரஸ் 2 ஆண்டுகளில் உலகை ஒரு புரட்டு புரட்டி யெடுத்துவிட்டது. இந்த கரோனா அலை யால் 65 லட்சத் திற்கும் அதிகமானோர் பலியாகிய நிலையில், 3 கோடிக்கும் அதிகமானோர் இயல்பு நிலையை இழந்துள்ளனர். பிரிட்டன் மட்டுமின்றி அமெரிக்கா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளிலும் புதுவகை கரோனா கண்டறியப்பட்டுள்ளது.
இதனால் மீண்டும் கரோனா அலையா? என்ற அச்சம் உலகம் முழுவதும் ஏற்பட்ட நிலையில், கடந்த 28 நாட்களில் (ஜூலை 10 முதல் ஆகஸ்ட் 6 வரை) உலகம் முழுவதும் கிட்டத்தட்ட 15 லட்சம் மக்கள் (1.5மில்லியன்) கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 2,500 க்கும் மேற்பட்ட உயிரிழந்ததாகவும் உலக சுகாதார நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது. ஆனால் வரும் காலங்களில் கரோனா பரவல் எப்படிஇருக்கும் என எச்சரிக்கை எதுவும் உலக சுகாதார நிறுவனம் வெளிப்படையாக எதையும் கூறவில்லை.
No comments:
Post a Comment