திராவிடர் கழகத் தலைவர் முனைவர் கி.வீரமணி அவர்களுக்கு ‘தகைசால் தமிழர்’ விருது - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, August 3, 2023

திராவிடர் கழகத் தலைவர் முனைவர் கி.வீரமணி அவர்களுக்கு ‘தகைசால் தமிழர்’ விருது

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி தமிழ்நாடு 

மாநில செயலாளர் இரா.முத்தரசன் வரவேற்பு

சென்னை,ஆக.3- இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற் குழுவின் சார்பில் தமிழ்நாடு மாநில செயலாளர் இரா.முத்தரசன் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது,

‘தகைசால் தமிழர்’ விருதுக்கு திராவிடர் கழகத் தலைவர் முனை வர் கி.வீரமணி அவர்கள் தேர்வு செய்யப்பட்டுள் ளதும், அவருக்கு சுதந் திரதின கொண்டாட்டத் தின் போது  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் விருது வழங்க இருப் பதையும், இந்தியக் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாநி லக்குழு சார்பில் வர வேற்கிறோம்.

தமிழ்நாடு அரசு, ‘தகைசால் தமிழர்’ விரு தினை தோழர் சங்கரய்யா அவர்களுக்கும், பின்னர் இரா.நல்லகண்ணு அவர் களுக்கும் வழங்கியதைத் தொடர்ந்து தற்போது ஆசிரியர் கி.வீரமணி அவர்களுக்கு வழங்க இருப்பது மகிழ்ச்சியளிக் கிறது. தமிழ்நாடு முதல மைச்சரின் இத்தகைய தேர்வு பாராட்டுக்குரியது.

 ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் 10 வயதி லிருந்தே பொதுவாழ்வில் ஈடுபட்டு வருபவர். தந்தை பெரியாரின் சுய மரியாதை, பகுத்தறிவு கருத்துக்களை முன்னெ டுப்பவர். தனது பொது வாழ்வில் பலமுறை சிறை சென்றவர். வழக்குகளை சந்தித்தவர். 60 ஆண்டு களுக்கும் மேலாக ‘விடு தலை’ நாளிதழ் ஆசிரிய ராகப் பணிச் செய்து வருபவர்.

சமூக நீதி, சமத் துவத்துக்கான போராட் டங்களில் எப்போதும் முன் நிற்பவர். ஜாதி, மத அடிப்படை வாதங்களை முன்வைத்து மக்களை பிரிக்கும் பிளவுவாத சக் திகளுக்கு எதிராக சமூக அறிவியல் கருத்துகளை முன்னெடுப்பவர்.

பன்முகம், மதச்சார் பின்மை, நாடாளுமன்ற ஜனநாயகம், சட்டத்தின் ஆட்சி முறை, இன்றைய ஒன்றிய ஆட்சியாளர் களால் கடும் நெருக்கடிக் குள்ளாகியுள்ள சூழலில், ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் கருத்துக் களும், போராட்டங்களும் முன்னிலும் அதிகம் தேவைப்படுகின்றன.

அவருக்கு தமிழ்நாடு அரசு மிகுந்த பொருத்த மானச் சூழலில் ‘தகைச் சால் தமிழர்’ விருது அளிப்பது கண்டு இந்தி யக் கம்யூனிஸ்ட் கட்சி மகிழ்கிறது, வரவேற் கிறது. அவருக்கு தனது தோழமைபூர்வமான நல் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது.

-இவ்வாறு இரா.முத் தரசன் குறிப்பிட்டுள்ளார்.


No comments:

Post a Comment