சென்னை, ஆக.6 - வேளாண்மை வளர்ச்சிக்காக விவசாயிகளுக்கு உதவும் வகையில் புதிய கண்டுபிடிப்புகள் வாயிலாக சிறந்த வாகனங்களை தயாரித்து வழங்கி வரும் சோனாலிகா டிராக்டர்ஸ் நிறுவனம் 2023-2024ஆம் நிதியாண்டில் ஜூலை மாதத்தில் 10,683 டிராக்டர்களை விற்பனை செய்து 14 சதவீத வளர்ச்சியை எட்டியுள்ளது. இதன் மூலம் ஒட்டுமொத்த டிராக்டர் சந்தையின் வளர்ச்சி விகிதத்தையும் (மதிப்பீடு 6.4%) விஞ்சியுள்ளது.
விவசாயிகளின் எதிர்பார்ப்புகளை பிராந்திய ரீதியில் அணுகி அவர்களுக்குத் தேவையானதை உருவாக்கித் தருகி றோம். அவர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவது, இயந்திர மயமாக்கலில் விவசாயிகளை ஈடுபடுத்துவது ஆகிய நடவடிக்கைகள் மூலமாக விவசாயிகளுக்கு தொடர்ந்து உதவுவதோடு அவர்களது வாழ்வில் வளம் சேர்க்கத் துணை புரிவதே நிறுவனத்தின் லட்சியம் என இந்நிறுவனத்தின் இணை நிர்வாக இயக்குநர் ரமன் மிட்டல் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment