சண்டிகர், ஆக.27 - ஹிந்துத்துவா அமைப்பின் 'சோபா' யாத்திரை அறிவிப்பு, அரியானாவில் மீண் டும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், நூஹ் மாவட்டத்தில் அலைபேசி மற்றும் இணையதள சேவை முடக்கப்பட்டுள்ளது.
பாஜகவின் வகுப்புவாத அரசி யலால் அரியானா மாநிலத்தின் நூஹ், குர்கான், மேவாத் உள் ளிட்ட 5 மாவட்டங்களில் ஆகஸ்ட் முதல் வாரம் வன்முறை அரங்கேறியது. இந்த வன் முறையில் 6 பேர் உயிரிழந்த நிலையில், நூஹ், மேவாத் மாவட் டம் கடுமையாக பாதிக்கப்பட்டது. வன்முறையைக் கட்டுப்படுத்து கிறோம் என்ற பெயரில் ஆளும் பாஜக அரசு முஸ்லிம் மக்களின் வீடுகள், கடைகளை புல்டோசர் மூலம் இடித்து தரைமட்டமாக் கியது.
பின்னர், உயர்நீதிமன்ற தீர்ப் பால் புல்டோசர் நடவ டிக்கை மற்றும் வன்முறை சம்பவங்கள் ஓரளவு குறைந்திருந்தன.
இந்நிலையில், “சர்வ் ஜாதிய ஹிந்து மகா பஞ்சாயத்” என்ற தீவிர ஹிந்துத்துவா அமைப்பு நூஹ் மாவட்டத்தில் நாளை (28.8.2023) “சோபா யாத்திரை” என்ற பெயரில் வகுப்பவாத ஊர்வலத்தை நடத்துவதாக அறிவித்தது. இந்த ஊர்வலஅறிவிப்பு அரியானாவில் மீண்டும் பதற் றத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையடுத்து நூஹ் மாவட்ட பகுதியில் அலைபேசி, இணையம் மற்றும் குறுந்தகவல் சேவை களுக்கு தடை விதிக்கப்பட்டுள் ளது.
இந்த அலைபேசி இணைய தள தடை சனிக்கிழமை (ஆகஸ்ட் 26) மதியம் 12.00 மணி தொடங்கி திங்களன்று (ஆகஸ்ட் 28) இரவு 12 மணி வரை அமலில் இருக்கும் என கூடுதல் தலைமைச் செய லாளர் டி.வி.எஸ்.என். பிரசாத் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment