கோயம்புத்தூர், சூலூர் பாவேந்தர் பேரவை புலவர் செந்தலை ந.கவுதமனின் வாழ்விணையரும், பல்லடம் அரசு மேல்நிலைப் பள்ளி மேனாள் தலைமையாசிரியர் சூ.ப.அரங்கசாமி (எஸ்.பி.ஆர்.) - பள்ளபாளையம் சானகி இணையரின் மகளுமான சூ.அர.உலகநாயகி (வயது 62) 23.8.2023 அன்று இரவு மறைவுற்றார்.
செகதாம்பாள் எனும் இயற்பெயரைத் தமிழுணர் வால் உலகநாயகி எனச் சட்டப்படி மாற்றிக் கொண்டவர்.
தாலி இல்லாத சுயமரியாதைத் திருமணம் ஏற்று, உறுதியான பகுத்தறிவு வாழ்வை மனநிறைவோடு மேற்கொண்டவர்.
மகள் க. தாய்மொழி - மருமகன் மரு.கு.இளந்தமிழன் பெயர்த்தி தா.இ.அவனி இளமொழி முதலான அனைவரின் வளர்ச்சிக்கும் அடித்தளமாகத் தம் வாழ்வை அமைத்துக் கொண்டவர்.
அம்மையாரின் உடல் சூலூர் எஸ்.வி.எல்.நகர் 'தாயகம்' இல்லத்திலிருந்து இறுதி ஊர்வலம் புறப்பட்டு, சூலூர் சமத்துவவனம் மின்மயானத்தில் உடல் அடக்கம் செய்யப்பட்டது. தொடர்புக்கு: 9944486226
குறிப்பு: கழகத் தலைவர் இன்று (24.8.2023) காலை தொலைபேசியில் புலவர் கவுதமன் அவர்களிடம் பேசி, ஆறுதல் கூறினார்.
No comments:
Post a Comment