புதுடில்லி, ஆக. 7- பாதுகாப்புப் படைகளில் பெண்க ளுக்கு கூடுதல் பிரதிநிதித்துவம் வழங்கவும், திருநங்கைகளுக்கு இட ஒதுக்கீடு வழங்கவும் நாடாளுமன்ற நிலைக் குழு பரிந்துரை செய்துள் ளது. ஒன்றிய அரசுத் துறைகளில் பணியாளர் கள் தேர்வு குறித்து, சுஷில் குமார் மோடி தலைமையிலான பணியாளர், குறை தீர்க்கும் பிரிவு, சட்டம் மற்றும் நீதித்துறை ஆகிய வற்றின் நிலைக்குழு ஆய்வு செய்து நாடாளுமன்றத் தில் அறிக்கை சமர்ப்பித்து உள்ளது.
அதில், ஒன்றிய பாது காப்பு படைகள், அசாம் ரைபிள்ஸ் படையில் கடந்தாண்டு நிலவரப்படி பெண்கள் 3.76 சதவீதம் மட்டுமே உள்ளனர். மோச மான வானிலை மற்றும் கரடு முரடான நிலப் பகு திகளில் வேலை பார்க்க வேண்டிய சூழல் உள்ள தால் இந்த பணியில் சேர பெண்கள் விரும்புவது இல்லை. போர் அல்லது ஆயுதக் கிளர்ச்சி உள் ளிட்ட சூழ்நிலைகளை தவிர இதர சமயங்களில் பெண்களுக்கு சாதகமாக உள்ள இடங்களில் பணி புரிய அனுமதிக்க வேண் டும். இன்னும் 3 வருடங் களில் பாதுகாப்புப் படை களில் பெண்கள் எண் ணிக்கையை 5 சதவீதமாக உயர்த்த வேண்டும் என பெண்களுக்கு அதிகாரம ளித்தலுக்கான நாடாளு மன்ற நிலைக்குழு பரிந்து ரைத்துள்ளது.
எனவே, ஒன்றிய பாது காப்புப் படையில் பெண் கள் அதிகளவில் சேருவதை ஊக்குவிக்க வேண்டும். மேலும், ஒன்றிய படை களில் திருநங்கைகளுக்கு இட ஒதுக்கீடு அளிப்பதன் மூலம் அவர்களையும் சமூக நீரோட்டத்தில் இணைக்க முடியும் என குறிப்பிட்டுள்ளது.
No comments:
Post a Comment