இலங்கை கடற்படை தாக்குதலால் பாதிக்கப்பட்ட மீனவர் நலனுக்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன? மக்களவையில் ஆ.ராசா கேள்வி! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, August 4, 2023

இலங்கை கடற்படை தாக்குதலால் பாதிக்கப்பட்ட மீனவர் நலனுக்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன? மக்களவையில் ஆ.ராசா கேள்வி!

புதுடில்லி, ஆக. 4 - கடலில் மீன் பிடிக்க செல்லும் அப்பாவி தமிழ் நாட்டு மீனவர்கள்மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்துவதும், கைதிகளாக பிடித்துச் செல்வதுமான சம்பவங்களால் மீனவர் குடும்பங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு தவிப்பதை தடுக்க ஒன்றிய அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் என்ன என்று நாடா ளுமன்ற மக்களவையில் ஆ.ராசா கேள்வி எழுப்பினார்.

அது குறித்த விவரம் வருமாறு:

(அ) தமிழ்நாட்டு மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படையினர் மேற்கொள்ளும் தாக்குதல் நட வடிக்கைகள் அதிகரித்து வரும் நிலையில் இப்பிரச்சினையைச் சமாளிக்க ஒன்றிய அரசு எடுத்த நடவடிக்கைகள் என்ன ? (ஆ) பட குகள் சேதமடைந்த மீனவர்களுக்கு இழப்பீடு வழங்குவது குறித்து பரி சீலிக்கப்பட்டுள்ளதா, அப்படியா னால் அதன் விவரங்கள் என்ன ?

(இ) தொடர்ந்து வரும் இந்தப் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு காண, அவற்றை விவாதித்து முடிவு எட்டப்படும் வகையில் மீன்வளத் துறையினரின் கூட்டுப் பணிக் குழுக் கூட்டம் கூட்டப்பட்டதா?

(ஈ) அப்படியானால் அதன் விவரங்கள், இல்லையென்றால் அதற்கான காரணம் என்ன?

மேற்கண்ட கேள்விகளுக்கு ஒன்றிய அரசின் வெளிவிவகாரத் துறை இணையமைச்சர் வி.முரளி தரன் எழுத்துப்பூர்வமாக அளித்த பதில் வருமாறு :

(அ) முதல் (ஈ) வரை : இந்திய மீனவர்களின் பாதுகாப்பு மற்றும் நலனுக்கு இந்திய அரசு அதிக முக் கியத்துவம் அளிக்கிறது. இந்திய பிரதமர், இலங்கை பிரதமருட னான உயர்மட்ட சந்திப்புகளில் மீனவர் பிரச்சினை பற்றி எடுத்துச் சொல்லியுள்ளார். மீனவர்கள் பிரச்சினையை முற்றிலும் மனிதாபி மான மற்றும் வாழ்வாதார பிரச்சி னையாக கருதுமாறு இலங்கை அரசிடம் கேட்டுக் கொள்ளப்பட்டு உள்ளது. மேலும், எந்த சூழ்நிலை யிலும் தீவிர நடவடிக்கைகளில் ஈடுபடாமல் இருக்க இரு தரப் பினரும் உறுதியளிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது. மீனவர்கள் பிரச்சினைகள் தொடர்பாக மீன்வளத்துறையினரின் கூட்டுப் பணிக்குழுக் கூட்டங்கள் தொடர்ந்து நடத்தப்பட்டு வரு கின்றன. இரு தரப்பினருக்கும் இடையில் 2022 மார்ச் மாதம் மீன் வளம் தொடர்பான கூட்டுப்பணிக் குழுக் கூட்டம் நடைபெற்றது. இந்தியாவிற்கும், இலங்கைக்கும் இடையிலான இருதரப்பு கலந்தா லோசனை நிகழ்ச்சி நிரலுக்கேற்ப மீனவர்கள் மற்றும் மீன்பிடி படகுகள் தொடர்பான பிரச்சினை உட்பட மீன்பிடி த்தலில் உள்ள அனைத்து பிரச்சினைகள் குறித் தும் கூட்டு பணிக் குழு விரிவாக விவாதித்துள்ளது.

No comments:

Post a Comment