தனி புலன்விசாரணைப் பிரிவு செயல்பாட்டிற்கு வந்தது - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, August 1, 2023

தனி புலன்விசாரணைப் பிரிவு செயல்பாட்டிற்கு வந்தது

சென்னை, ஆக. 1- வெடிபொருள் உள்பட முக்கிய வழக்குகளை விசாரிக் கும் `புலன் விசாரணை' பிரிவு காவல் நிலையங்கள் சென்னையில் இன்று (1.8.2023) முதல் செயல்பட உள்ளன. 

சென்னை காவல் நிலையங்களில் நிலுவையில் உள்ள முக்கிய வழக்கு களான கொலை, ஆதாயக் கொலை, கொள்ளை, வழிப்பறி, சந்தேக மரணம், ஆட்கடத் தல், வெடிபொருள், மத, ஜாதி ரீதியான மோதல் உள்பட பல்வேறு வகையான வழக்குகளில் விரைந்து துப்பு துலக்க வசதியாக சென்னை பெருநகர காவலில் உள்ள 12 காவல் மாவட்டங்களிலும் 12 புலன் விசாரணை பிரிவு காவல் நிலை யங்கள் தொடங்கப்பட்டுள்ளன. 

இப்பிரிவில் உள்ள காவலர்களுக் கான 3 நாட்கள் பயிற்சி முகாம் சென்னை காவல் ஆணையர் அலுவல கத்தில் கடந்த 27ஆ-ம் தேதி முதல் நடை பெற்றது.

இதை காவல் ஆணையர் சந்தீப்ராய் ரத்தோர் தொடங்கி வைத்தி ருந்தார். இந்நிலையில், இந்த `புலன் விசாரணை' பிரிவு காவல் நிலையங்கள் இன்றுமுதல் சென்னையில் செயல்பட உள்ளன. சென்னை காவலில் உள்ள 12 காவல் மாவட்டங்களில், அந்தந்த மாவட்ட துணை ஆணையர்கள் மேற்பார்வையில், குற்றப்பிரிவு காவலர்கள் தலைமையில் இவை செயல்பட உள்ளன.

No comments:

Post a Comment