மோடி துவக்கி வைத்த காப்பீடு திட்டமான "ஆயுஷ்மான் பாரத்" திட்டத்தில் மிகப்பெரும் முறைகேடு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, August 11, 2023

மோடி துவக்கி வைத்த காப்பீடு திட்டமான "ஆயுஷ்மான் பாரத்" திட்டத்தில் மிகப்பெரும் முறைகேடு


மும்பை, ஆக 11
- ஒன்றிய அரசு அளிக்கும் பிரதமரின் "ஆயுஷ்மான் பாரத்" மருத் துவக் காப்பீட்டு திட்டத் தில் 7.5 லட்சம் பேர் ஒரே தொடர்பு எண்ணைக் கொடுத்து முறைகேட் டில் ஈடுபட்டிருப்பது தெரியவந்துள்ளது. 

பிரதமரின் ஆயுஷ் மான் பாரத் மருத்துவக் காப்பீட்டு திட்டத்தில் 7.5 லட்சம் பயனாளிகள் ஒரே தொடர்பு எண் ணைக் கொடுத்து முறை கேட்டில் ஈடுபட்டிருப் பது தெரியவந்துள்ளது. மக்களவையில் 8.8.2023 அன்று தாக்கல் செய்யப் பட்ட சி.ஏ.ஜி. அறிக்கை யில் இந்தத் தகவல் இடம் பெற்றுள்ளது.

7,49,820 பயனாளிகள் 9999999999 என்ற ஒரே தொடர்பு எண்ணை அளித்திருப்பதாகவும் 7.5 லட்சம் பயனாளிகள் கொடுத்த ஒரே தொடர்பு எண்ணும் போலியானது என்றும் அந்த அறிக்கை யில் கூறப்பட்டுள்ளது. மேலும் 8888888888 என்ற ஒரே தொடர்பு எண்ணை 1,39,300 பயனாளிகள் கொடுத்துள்ளனர் என்றும் குறிப்பிட்டுள்ளது.

9000000000 என்ற ஒரே எண்ணை 96,046 பேர் தொடர்பு எண்ணாக அளித்து மருத்துவக் காப்பீட்டு திட்டத்தில் சேர்ந்துள்ளனர். 9 லட் சம் பேர் தொடர்பு எண் எதுவும் கொடுக்காமலும் ஒன்றிய அரசின் மருத்து வக் காப்பீட்டு திட்டத் தில் சேர்ந்துள்ளனர். தமிழ்நாடு உள்ளிட்ட 6 மாநிலங்களில் ஓய்வூதிய தாரர்களும் இந்தத் திட் டத்தில் சேர்ந்துள்ளனர். 36 வழக்குகளில் 18 ஆதார் எண்களுக்கு எதிராக இரண்டு பதிவுகளும், தமிழ்நாட்டில் 7 ஆதார் எண்களுக்கு எதிராக 4,761 பதிவுகளும் செய்யப் பட்டன. ஆறு மாநிலங் கள் மற்றும் யூனியன் பிர தேசங்களில், தகுதியில் லாத குடும்பங்கள் PMJAY பயனாளிகளாக பதிவு செய்யப்பட்டு, சுகாதாரத் திட்டத்தின் பலன்க ளைப் பெற்றிருப்பது கண்டறியப்பட்டது.

2017 முதல் 2021 வரை 2,103 பேருக்கு அவர்கள் இறந்த பின்னரும் ஒன் றிய அரசின் ஓய்வூதியம் வழங்கப்பட்டுள்ளது. 18 ஆதார் எண்களில் இரண்டு பதிவுகள் கொண்ட 36 பேரின் பெயர்கள் உள் ளன. தமிழ்நாட்டில் 7 ஆதார் எண்களுக்கு எதி ராக 4,761 பேரின் பெயர் கள் பதிவு செய்யப்பட்டு உள்ளன.

பிரதமரின் ஆயுஷ் மான் பாரத் மருத்துவக் காப்பீட்டு திட்டத்தின் கீழ் மொத்தம் 7.87 கோடி பேர் பயன்பெற்று வரு கின்றனர் என்று சி.ஏ.ஜி. அறிக்கையில் கூறப்படு கிறது. இந்தத் திட்டத்தை பிரதமர் மோடி 2019ஆம் ஆண்டு பொதுத்தேர் தலை முன்னிட்டு 2018 ஆம் ஆண்டில் தொடங்கி வைத்தார்.


No comments:

Post a Comment