பொது வாழ்க்கைக்கு ஏற்படுத்தப்படும் கொள்கைகள் பொது ஜனங்களில் யாருடைய தனிச் சுதந்திரத்திற்கும் பாதகமில்லாமலும் பிரயோகத்தில் உயர்வு - தாழ்வுத் தத்துவம் இல்லாததாகவுமிருக்க வேண்டும். முக்கியமாக இயற்கையோடியைந்ததாக இருக்க வேண்டும். அவையும் மற்றவர்களுடைய நியாயமான உரிமைக்கும் சுதந்தரத்திற்கும் சிறிதும் பாதகம் உண்டு பண்ணாததாக இருக்க வேண்டும். அன்றியும் அறிவுக்கும் சத்தியத்திற்கும் அனுபவத்திற்கும் ஏற்றதாகவும், அவசியம் கொண்டதாகவும் இருக்க வேண்டும்.
('குடிஅரசு' 26.10.1930)
No comments:
Post a Comment