தமிழ்நாடு அரசின் மகளிர் காவல்துறை பிரிவு - பெண் பதவியாளர்கள் பெருமளவில் பொறுப்பில் (பதவியில்) அமர்த்தப்பட்டு, ஆளுமைகளாக வலம் வருவது கண்டு பூரித்து மகிழ்ந்து, ‘திராவிட மாடல்' ஆட்சியின் முதலமைச்சரைப் பாராட்டி, வாழ்த்துகிறோம்!
தமிழ்நாட்டில் 50 ஆண்டுகளுக்கு முன்பு ‘திராவிட மாடல்' ஆட்சி முதலமைச்சர் - இன்றைய நூற்றாண்டு விழா நாயகர் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களால்தான் முதல் மகளிர் காவல் துறை பிரிவு தொடக்கப் பெற்றது - பிறகு வளர்ந்தது.
மூல காரணகர்த்தா யார்?
அவருடைய அறிவு ஆசான் தந்தை பெரியாரின் சுயமரியாதை இயக்க முதல் மாகாண மாநாடு 1929 இல் செங்கற்பட்டில் நடைபெற்றபோது, தந்தை பெரியார் நிறைவேற்றிய தீர்மானம் ‘‘இராணுவத்திலும், போலீஸ் துறையிலும் பெண்களுக்கு சம வாய்ப்பு - வேலை வாய்ப்புகளில் தரவேண்டும்'' என்று 94 ஆண்டுகளுக்கு முன்பே தீர்மானம் போட்டு - அது ஆணையாக செயல்மலர்களாகியது!
அன்று கேலிச் சிரிப்பு, நையாண்டி செய்தனர் தந்தை பெரியாரைப் பார்த்து!
இன்று?
இராணுவ மேஜர் ஜெனரல் பெண் அதிகாரியாக - கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த இக்னோசிஸ் டெலாஸ் புளோரா பொறுப்பேற்று பெருமிதத்துடன் உலா வருகிறார்.
இந்த வளர்ச்சியும், மாற்றமும் ஏற்படக் காரணம் என்ன? தந்தை பெரியாரும், திராவிட இயக்கமும் அல்லவா?
இப்போது சொல்லுங்கள், ‘‘திராவிடத்தால் வீழ்ந்தோமா, எழுந்தோமா?''
இதுபோன்ற பல வரலாற்றுச் சாதனைகளை வீட்டுக்கு வீடு, வீதிக்கு வீதி மக்களிடம் எடுத்துக் கூறுங்கள்!
கலைஞர் நூற்றாண்டு மகளிர் உரிமைத் தொகை என வழங்கிட உள்ள 1000 ரூபாயுடன் இந்த பழைய வரலாற்றுக் குறிப்பையும் துண்டறிக்கைகளாக இயக்க சார்பில் பரப்பி மகிழுங்கள், தோழர்களே!
திராவிடம் வெறும் அடுத்த தேர்தலைப்பற்றி மட்டும் கவலைப்படும் இயக்கமல்ல. அடுத்த தலைமுறை மாற்றத்தை மய்யப்படுத்தி ஆட்சி செய்யும் இயக்கம்!
திராவிடம் வெல்லும்; வரலாறு அதைச் சொல்லும்!
No comments:
Post a Comment